தமிழ் சினிமாவில் சமீப காலமாக நுழைந்த புதிய முகங்களில், அனைவரது மனதிலும் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் தேஜூ அஸ்வினி. ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தில் நடித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இப்படி இருக்க சமீபத்தில் தனியார் சேனலுக்கு இவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டியில், தனது சினிமா பயணத்தை குறித்தும், குடும்பம், பிரபலமான காதல் எதிர்பார்ப்புகள், மேலும் சினிமா கனவுகள் என அனைத்தை குறித்தும் தேஜூ அஸ்வினி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதன்படி அவர் பேசுகையில், " நான் சினிமாவுக்குள் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நண்பர்கள் சொல்லி ஒரு யூ-டியூப் குறும்படத்தில் நடித்தேன். அதை பார்த்தவர்கள் ‘நீ சினிமா பண்ணலாம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்படி ஒரு வழியாகதான் ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் வந்தது. அதைத் தொடர்ந்து இப்போது ‘பிளாக்மெயில்’ போன்ற பெரிய வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இது எல்லாம் எதிர்பாராமல் நடந்த விஷயங்கள்.. நான் ரொம்ப ஜாலியாக இருப்பேன். என்னால் சும்மா உட்கார்ந்து இருக்கவே முடியாது. எனக்கு சுற்றுலா பிடிக்கும், சிரிப்பும், சத்தமும் பிடிக்கும். ஓர் இடத்தில் அடங்கி இருப்பது என்னால் முடியாது. நான் ஓயாத அலை மாதிரி. என்னை தடுக்க யாராலும் முடியாது.. அதுமட்டுமல்லாமல் நான் படிக்கும் காலத்திலேயே என் அக்கா காதல் செய்துவிட்டார். அதனால் என் பெற்றோர் மிகவும் கவனமாக என்னை வளர்த்தார்கள். ‘ஒருத்தியை விட்டுவிட்டோம், உன்னையும் விட்டுவிட மாட்டோம்’ என்ற ரீதியில் மிகவும் கண்டிப்பாக பார்த்தார்கள். என் வாழ்க்கை பள்ளி விட்டால் வீடு, அடுத்து கல்லூரி விட்டால் வீடு என்பதாகவே இருந்தது. அதனால் காதலுக்கு வாய்ப்பே இல்லை..

இப்படி இருக்க கல்லூரியில் படிக்கும் போது சில சீனியர்கள் மீது கிரஷ் இருந்தது... ஆனால் மற்றபடி எதுவும் நடக்கவில்லை.. மேலும் சமீபத்தில் பார்த்த படங்களில் ‘பேமிலிமேன்’ என்ற ஹிந்திப் படத்தில் சமந்தா நடித்த ஆக்ஷன் வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அந்த மாதிரியான ஆக்ஷன் ஹீரோயின் கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் பெண்கள் ஆண் நட்சத்திரங்களை நம்பிக்கையோடு டக்கரடிக்கும் கதாபாத்திரங்கள் அதிகமாக இருக்க வேண்டும். தொடர்ந்து நான் கதையின் தேவையைப் பொறுத்துதான் ஒரு காட்சியில் நடிப்பேன். அது உண்மையாகவே அவசியமான, கதையை நகர்த்தும் காட்சியென்றால், அது நெருக்கமான காட்சியோ, முத்தக் காட்சியோ எதுவாக இருந்தாலும் நடிப்பதில் தயக்கமில்லை.
இதையும் படிங்க: திரையில் சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு..! இந்த நடிகர் தான் நடிக்கனும்..டென்னிஸ் வீராங்கனை பிடிவாதம்..!
காரணம், நான் ஒரு நடிகை. கதைக்காக நான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இருக்கின்றன" என வெளிப்படையாக பேசியிருக்கிறார். இப்படி இருக்க ஜி.வி.பிரகாஷுடன் தேஜூ நடித்துள்ள 'பிளாக்மெயில்' திரைப்படம், இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகி, விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் தேஜூ, முக்கிய கதாநாயகியாக நடித்து இருப்பது மட்டுமல்லாமல், பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக் உள்ளிட்டோருடன் இணைந்து முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளனர். குறிப்பாக தேஜூ அஸ்வினி, ஒரு புதிய தலைமுறை நடிகை, தன்னம்பிக்கையோடும், நேர்த்தியோடும், நகைச்சுவையோடும் பேசக்கூடியவர். வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை நேர்மையாக ஏற்று, அதன் மீது நம்பிக்கையுடன் சினிமா கனவுகளை அமைத்துக் கொள்கிறார். மேலும் ‘நான் ஓயாத அலை’ என்ற வார்த்தை, அவரின் சுட்டித்தனத்தையும், தெளிவான நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது. ‘பிளாக்மெயில்’ திரைப்படம் அவரது நடிப்பு திறமையை வெளிக்கொணர ஒரு முக்கியமான படியாக இருக்கும் என நிச்சயமாக கூறலாம்.

ஆகவே சினிமா ரசிகர்கள், இந்த புதிய முகத்தின் பயணத்தை ஆர்வமுடன் கவனித்து வருகிறார்கள். தேஜூ அஸ்வினி, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: ‘பறந்து போ’ திரைப்படத்தில் நடித்த அஜு வர்கீஸ்..! பாராட்டி தள்ளிய மெகா ஸ்டார் மம்முட்டி..!