தமிழ் சினிமாவில் உணர்ச்சியும் வலிமையும் சமூக விமர்சனங்களும் நிறைந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் தான் இயக்குநர் ராம். இவர் ‘கற்றது தமிழ்’, ‘தரமணி’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர். சமூக அக்கறையும் மனித உறவுகளின் வெளிபாட்டையும் திரையில் எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய இயக்குநராக இவர் பார்க்கப்படுகிறார். இந்த வரிசையில், இயக்குநர் ராம் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் தான் ‘பறந்து போ’. இப்படம் திரைக்கு வந்த பிறகு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சுயமாகச் சிந்திக்க வைக்கும் யதார்த்தப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம், நீண்ட இடைவெளிக்கு பின் ராம் இயக்கிய படம் என்ற நிலையில் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தது.
சமூக சூழ்நிலைகளையும் மனிதர்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் ஆழமான பார்வையில் சித்தரித்தது இப்படம். இப்படி இருக்க ‘பறந்து போ’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இவர்களில், மிகச்சிறிய ஆனால் முக்கியமான பாத்திரத்தில் நடித்த அஜு வர்கீஸ், தற்போது ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் அளித்த பேட்டியில், இப்படத்தில் நடித்ததற்காக, மலையாள சினிமாவின் லெஜண்டரி நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டி அவரிடம் நேரிலேயே தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சம்பவத்தை கூறியிருக்கிறார்.

அவர் பேசுகையில்," படத்தை பார்த்த மம்முட்டி சார் என்னை தொடர்பு கொண்டு ‘Good work’ என்று சொன்னார். இது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. ஏற்கனவே 15 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். ஆனால் இதுவரை அவர் எனது நடிப்பைப் பற்றி ஒருமுறை கூட நேரடியாகக் கூறியதில்லை. அதுவும் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு தமிழ் படத்திற்கு அவர் பாராட்டுவது எனக்கு மிகப் பெரிய பரிசு போல உணர்ந்தேன். உடனே இயக்குநர் ராம் சாருக்கு அழைத்து இதைச் சொன்னேன்" என அஜு வர்கீஸ் கூறினார். இது ஒரு சாதாரண பாராட்டாக இல்லாமல், தமிழ் மற்றும் மலையாள சினிமா நட்புறவின் ஒரு அழகான படமாக பார்க்கப்படுகிறது. மம்முட்டி இயக்குநர் ராம் இயக்கிய ‘பேரன்பு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: "பறந்து போ"படம் ஓடாதுன்னு சொன்னாங்க.. இவரது நம்பிக்கையில் தான் படமே..! இயக்குனர் ராம் பளிச் பேச்சு..!
அந்தப் படம் இந்திய சினிமாவை உலகளவில் பேச வைத்த ஓர் உணர்வுப் பூர்வமான படைப்பாக இருந்தது. ‘பறந்து போ’ படத்தில் அஜு வர்கீஸ் மிக நீளமான கதாபாத்திரம் ஏற்கவில்லை என்றாலும், அவரது நடிப்பு பார்த்த அத்தனை பேரையும் மெய்சிலிர்க்க செய்ததே இந்த பாராட்டுக்கு காரணமாக இருக்கிறது. கதையின் கோணத்திலும், அந்த கேரக்டரின் தாக்கத்திலும், இயக்குநர் ராம் வழங்கிய சூழ்நிலையும், அஜுவின் நடிப்பும் ஒன்றாக சேர்ந்துள்ளன. தமிழ், மலையாள சினிமாக்களுக்கு இடையே உள்ள தொடர்பு கடந்த சில வருடங்களாக வலுப்பெற்று வருகிறது. இதற்கு இடையில், இந்த பாராட்டு சம்பவம், மொழி எல்லைகளை கடந்து ஒரு உண்மையான சினிமா பார்வையாளனின் பார்வையை வெளிப்படுத்துகிறது. சிறிய முயற்சி கூட சரியான கண்ணோட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆகேவ இயக்குநர் ராமின் இயக்கத்தில் உருவான ‘பறந்து போ’ திரைப்படம் தனது கதையால் மட்டுமல்ல, அதன் தாக்கத்தால் பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது. அதில் நடித்த அஜு வர்கீஸ், தன்னுடைய பங்களிப்புக்காக மெகா ஸ்டார் மம்முட்டியிடம் நேரடியாக பாராட்டு பெற்றது,

அந்த படத்தின் ஒரு வகையான வெற்றியை குறிப்பதாகவும், தமிழ் சினிமா மீது மலையாள திரையுலகின் பாராட்டாகவும் பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ‘பறந்து போ’ போன்ற படங்கள் மேலும் உருவாகி, எல்லைகளை கடந்த உணர்வுகளைப் பேச வேண்டும் என்பதுதான் பலரது கனவாக இருக்கிறது.
இதையும் படிங்க: வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன இயக்குநர் அட்லீ..! குஷியில் "பறந்து போ" பட டீம்..!