இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தனது ரசிகர்களின் இதயங்களில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய ஒரு தனித்துவமான விளையாட்டு நாயகி. இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பதிவு செய்த அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், சமூகத்தில் வெளிப்படையாக கருத்துகளாலும் பலரது கவனத்தையும் பெற்றவர். குறிப்பாக 2000களின் பிற்பகுதியில் விளையாட்டு மற்றும் ஊடக உலகத்தில் பெரும் அசர்ச்சியாக அமைந்தது அவரது திருமணம். ஏனெனில் பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து, 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவுகள் குறித்த அரசியல் சூழ்நிலைகளுக்கிடையில் இந்த திருமணம் பெரிய சர்ச்சையாகவே இருந்தது. இருப்பினும், இருவரும் கலாச்சார வேறுபாடுகளையும் மீறி, 15 ஆண்டுகளுக்கு மேல் தங்களது உறவைக் காப்பாற்றி வருகின்றனர்.
இப்படியாக இருவரின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மென்மையாக சென்று வந்தாலும், கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கின. இது ஊடகங்களில் இடையிடையே வெளிவந்த பேச்சுக்களாலும் உறுதியாகி வந்தது. பின் 2024-ல், சானியா மற்றும் சோயிப் இருவரும் விவாகரத்து செய்துகொண்டதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்-யை மறுமணம் செய்து கொண்டார். சானியா மிர்சா இந்த தனிமையான கட்டத்தை மனபலத்துடன் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையை மீண்டும் புதிய கோணத்தில் அமைத்துக் கொள்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இப்படி இருக்கையில் சானியா மிர்சாவின் வாழ்க்கை என்பது சாதனைகளால் மட்டுமல்ல, பல்வேறு சவால்களையும் கடந்த ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக உள்ளது. இதனை திரைக்கதையாக மாற்றும் முயற்சியை 2019-ம் ஆண்டிலேயே ஒரு பாலிவுட் நிறுவனம் அறிவித்தது. ஆனால் பின்னர் அது திட்டதிலிருந்து செயலாக்க நிலைக்கு செல்லாமல் மெதுவாக காணாமல் போய்விட்டது. இந்த நிலையில், மீண்டும் அந்த வாழ்க்கை வரலாறு திரைப்பட திட்டம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. சானியாவின் வாழ்க்கையில் உள்ள உன்னதமான தருணங்கள், வலிகள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் ஆகியவை திரையில் பிரதிபலிக்கப்படவிருக்கின்றன. இப்படி இருக்க முதலில் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் சானியாவாக நடிக்க தீபிகா படுகோனே மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரின் பெயர்களை சானியா பரிந்துரைத்ததாக தகவல்கள் வந்தன.
இதையும் படிங்க: ‘பறந்து போ’ திரைப்படத்தில் நடித்த அஜு வர்கீஸ்..! பாராட்டி தள்ளிய மெகா ஸ்டார் மம்முட்டி..!
இருவரும் விளையாட்டு கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர்கள் என்பதாலும், சானியாவுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும், அவர்கள் மிகச் சரியான தேர்வாக கருதப்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் சானியா மிர்சாவிடம், அவரது வாழ்க்கை படத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது, அவர் கொடுத்த பதில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அவர் பேசுகையில், “என் வாழ்க்கை வரலாறு படத்தில் அக்ஷய் குமார் நடித்தால் நன்றாக இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகை. அவர் நடித்தால் நிச்சயமாக அவரை காதலிப்பதற்கே தயாராக இருக்கிறேன்" எனக் கூறினார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் சமீப காலமாக, சானியா மிர்சா தொலைக்காட்சிப் நிகழ்ச்சிகளில், நேர்காணல் நிகழ்ச்சிகளில், விளம்பரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்ஸ்பிரேஷனல் பேச்சாளர், சமூக ஊடக தளங்களில் செல்வாக்கு வாய்ந்த நபராகவும், இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் அவர் திகழ்கிறார். அவருடைய வாழ்க்கை திரைக்கதையாக உருவாகும்போது, அது வெறும் விளையாட்டு வாழ்க்கையைச் சித்தரிக்காமல், ஒரு பெண்ணின் வாழ்வில் வரும் திருப்பங்களை, வலிமைகளை, சமாதானங்களை நெகிழ்ச்சிகரமாக சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் சானியா மிர்சா என்பவர் வெறும் டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்ல, அவர் இந்திய பெண்களின் திறன், துணிவின் உருவகமாக திகழ்பவர். அவருடைய வாழ்க்கை திரைக்கதையாக சினிமா வடிவத்தில் வரப்போவதாக வந்த தகவல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கோவையை அதிர வைக்க காத்திருக்கும் இசை கச்சேரி..! வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனியின் மாஸ்டர் பிளான்..!