தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு மகள் என்றால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருபவர் அனிகா சுரேந்திரன். "கண்ணானே கண்ணே கண்ணான கண்ணே" என்ற பாடலை கேட்டால் அனைவரது நினைவுக்கு வரும் அனிகாவை இன்றும் குழந்தையாகவே பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
இப்படி அவரை குழந்தையாக பார்த்த அனைவருக்கும் ஒருநாள் அவர் முத்தக்காட்சிகள் மற்றும் கிளாமர் உடைகளில் வலம் வருவது போன்றவைகளை பார்த்து முதலில் ஏற்று கொள்ள முடியவில்லை. பின் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பெரிய நட்சத்திரமாக தங்கள் மனதில் பதியவைக்க ஆரம்பித்தனர் அவரது ரசிகர்கள்.

இப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் வலம் வந்த நடிகை அனிகா சுரேந்திரன், இதுவரை அஜித்தின் என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம், நானும் ரௌடி தான், மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் வெளியான ‘புட்ட பொம்மா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து பல படங்களில் நடித்துள்ள அனிகா சமிபத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருப்பார்.
இதையும் படிங்க: அம்பியாக இருந்த என்னை அந்நியனாக மாற்றியது பிக்பாஸ் வீடுதான்..! நடிகை ஸ்ருத்திகா கல கல பேச்சு..!

தனுஷின் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த அனிகா சுரேந்திரன் அதில் "என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷ்யங்களை மறக்க முடியாது. இந்தப் படத்தில் ஜாலியாகப் பயணிக்க என்னுடன் பணியாற்றியவர்கள்தான் காரணம். படக்குழுவிற்கு நன்றி.
முக்கியமாக என் அம்மாவிற்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இவ்வளவு வருடங்கள் சப்போர்ட் ஆக இருந்த ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார். அவரது பேச்சுக்கும் நடிப்புக்கும் கிளாமர் புகைப்படங்களும் அடிமையான இளசுகள் தற்பொழுது அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

இதுவரை, கதை துடருன்னு, நான்கு நண்பர்கள், இனம், பவுட்டியுடே நாமத்தில், 5 சுந்தரிகல், நீலகாஷம் பச்சைக்கடல் சிவப்பு பூமி, நயனா, ஒன்னும் மின்டாதே, என்னை அறிந்தால், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன், பெரிய தந்தை, ஜானி ஜானி ஆமா அப்பா, விஸ்வாசம், மாமனிதன், தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், அன்புடன் உங்கள் வேதா, கோதாவின் ராஜா, பி.டி. சார், கோப்பை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்து, 2013ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளான சிறந்த குழந்தைக் கலைஞர் விருதை '5 சுந்தரிகல்' என்ற படத்திற்கும், 2011, 2018ம் ஆண்டிற்கான ஆசியாநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைக் கலைஞர் விருதை 'கதை துடருன்னு, பெரிய தந்தை' படத்திற்கும், 2020ம் ஆண்டிற்கான JFW திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைக் கலைஞர் விருதை 'விஸ்வாசம்' படைத்திற்கும் பெற்றார்.

இப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி இன்று பலரது மனதில் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ள அனிகாவின் சொத்து மதிப்பும் படத்திற்கு வாங்கும் சம்பளமும் தற்பொழுது கோடிகளில் மாறியுள்ளது. இந்த நிலையில், தான் உண்மையில் சினிமாவில் நடிக்க ஆசைப்படவில்லை என்றும் தான் செய்ய நினைத்த வேலையே வேறு எனவும் கூறி இருக்கிறார் நடிகை அனிகா.
அதன்படி, தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அனிகாவிடம் உண்மையில் உங்களது ஆம்பிஷன் என்னவென கேட்டதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் எனது ஆசை என்றால் "நான் ஏர் ஹாஸ்டஸ்" ஆக வேண்டும் என்பது தான். ஆனால் சூழ்நிலை என்னை சினிமாவில் இழுத்து விட்டது. ஆனால் ஒருநாளாவது அப்படி வேலை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை அல்லது அப்படி ஒரு ரோலில் ஆவது நடித்து விட வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், மிகப்பெரிய நிறைவேறாத ஆசைகள் சினிமா பிரபலங்களுக்கும் உண்டுதான் போல என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சான்வி மேக்னா அணிந்திருக்கும் ஆடை எங்கு வாங்கியது..? இணையத்தில் தேடி தேடி டையர்டான பெண்கள்..!