கோலிவுட் முதல் பாலிவுட் வரை, இசையால் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து வருபவர் அனிருத். இசை அரசராக தற்போதைய தலைமுறையில் திகழும் இவர், புது தலைமுறை இசை இயக்குநர்களில் தனக்கென ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான இசையால் மிளிர வைக்கும் செல்வாக்குள்ளவர். ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகளில் பரபரப்பாக கலந்துகொள்கிறார், மற்றொரு பக்கம் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
ஆனால் இன்னும் அவர் வாழ்க்கையில் திருமணம் எனும் புதிய கட்டத்துக்குள் நுழையவில்லை என்பது தான் பலரையும் ஆச்சரியப்படுத்தும் செய்தியாக உள்ளது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்ட, 'கூலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினியே, "ஆசியாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் அனிருத்" என புன்னகையுடன் கூறியது, நிகழ்ச்சியின் ஹைலைட்களாக மாறியது. இந்த உரையாடல் மட்டும் தான் நாளடைவில் நெட்டிசன்களின் பேச்சாக மாறி இணையம் முழுக்க பரவிச் சென்றது. அதிலிருந்து ரசிகர்கள் மனதில் ஒரே கேள்வி தான்.. என்னவெனில் “எப்போ கல்யாணம் அனிருத்?” என்பது தான். இந்நிலையில், தற்போது அந்தக் கேள்விக்கு சினிமா ரசிகர்களுக்கு ஓர் எதிர்பாராத கோணத்தில் பதில் கிடைத்திருக்கிறது. அதன்படி, நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புக்குப் பிறகு ‘கூலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இசை ரசிகர்களும், சூப்பர்ஸ்டார் ரசிகர்களும் கூட்டமாக திரையரங்குகளை நோக்கிச் செல்ல, இசையமைப்பாளர் அனிருத் நேரில் வரவில்லை என்றாலும், அவரது தந்தை ரவி ரகுநாத் திரையரங்கில் படம் பார்ப்பதற்காக வந்திருந்தார். திரைப்படத்தைக் கண்டு ரசித்த பிறகு, அவர் திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது, செய்தியாளர்கள் அவரை நோக்கி, பல கேள்விகளை எழுப்பினர். அவர்களில் ஒருவரான சினிமா பீட் செய்தியாளர் ஒருவர் “அனிருத் சாருக்கு எப்போ கல்யாணம்?” என நேரடியாகக் கேட்டுள்ளார். இந்தக் கேள்விக்கு அனிருத் தந்தை ரவி ரகுநாத் கொடுத்த பதில் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், "நான் உங்களை கேட்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அவருக்கு எப்ப கல்யாணம்.. அனிருத் சொன்னாருன்னா என்ன கூப்புடுங்க" என கலகலப்பாகக் கூறிய அவருடைய பதில், சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. இது ரசிகர்களிடையே ஒரு விதமான நகைச்சுவைச் சூழலை உருவாக்கி உள்ளது. அனிருத், தனது இளம்பருவத்தில் இருந்தே இசையை தனது உயிராகக் கொண்டவர். 2012-ம் ஆண்டு ‘3’ திரைப்படத்தில் "வாய்ஸா வாய்ஸா" பாடலின் மூலம் அறிமுகமானதும், இசை உலகையே பார்க்க வைத்தார். பின்னர், ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘வேதாளம்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ என பல்வேறு ஹிட் படங்களுக்கு இசையமைத்து, கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனது காலடியை பதித்து வருகிறார்.
இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா தான் இமோஜி.. இல்லைனா கிடையாது..! அனிருத் பேச்சால் கலக்கத்தில் இயக்குநர்கள்..!
சமீபத்தில் அவர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'ஜவான்' திரைப்படத்திற்காக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் அவ்விதம் ஒரு இசை ஆளுமையாக மாறிய இவர், இன்னும் திருமணம் செய்யாமல் தனியாக இருப்பது தான் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அனிருத்தின் திருமணம் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஊடகங்களும், புகழ்பெற்ற பிரபலங்களும் கூட கேள்வி எழுப்பி வருக்கின்றனர். பலரும் சமூக வலைதளங்களில் "அனிருத் கல்யாணம் எப்ப?" என்ற ஹாஷ்டேக்குடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகின்றனர். ஒருபக்கம் அவரது பிசியான கால அட்டவணை, மற்றொரு பக்கம் அவரது தனிப்பட்ட விருப்பங்கள் என எல்லாமே தற்போது அந்த முடிவைத் தள்ளிக்கொண்டே செல்கின்றன.

ஆகவே கூலி திரைப்பட வெளியீட்டின்போது, அனிருத் தந்தையின் நகைச்சுவையான பதில், ஒரு சாதாரண சம்பவமாக தோன்றினாலும், அதைச் சுற்றி உருவாகும் சமூக ஊடக பரபரப்புகள், மீம்கள், மீடியா ஆர்வங்கள் அனைத்தும் அனிருத்தின் ரசிகர்களுக்கிடையே உள்ள ஈர்ப்பை காட்டுகின்றன.
இதையும் படிங்க: சாட் ஜிபிடி-யால் அனிருத் செய்த வேலை..! நேர்மையான பேச்சால் சிக்கிய இசையமைப்பாளர்..!