தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகப் அனைவரது மனதிலும் பதியப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். ஆரம்ப காலங்களில் ‘த்ரில்லர்’ பாணியில் இசையமைத்த இவர், இன்று அனைத்து வகை இசைகளையும் எளிதாக செய்து காட்டும் வகையில் மாறி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமன்றி, இப்போது பாலிவுட்டிலும் தனது இசையால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொள்ளத் தொடங்கியுள்ள அனிருத், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் இசையை உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் வெளியாகும் முன்னரே, அதற்கான பாடல்கள் டிரெண்டிங்காக மாறியுள்ள நிலையில், அனிருத் அளித்த ஒரு திறந்த பேட்டி, இசை உலகைச் சுற்றியிருக்கும் தேடல்கள், மற்றும் அழகான யுக்திகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதன்படி தனது இசைப் பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்த அனிருத், தனது பாணி, அணுகுமுறை, மற்றும் குழுவாக வேலை செய்வது எப்படி என்பது குறித்தும் உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார். அதில், "இசையமைப்பாளராக அழுத்தம் என்பது இருக்கக்கூடும். ஆனால் அதை நான் முழுமையாக ரசிப்பேன். எனது இசைக்குழுவில் மொத்தம் 8 பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலையும் உருவாக்குவதற்கு முன்பாக, நாங்கள் எல்லோரும் சேர்ந்து பாட்டை, மெட்டும், இசை ஒத்திசைவையும் பற்றி விவாதிப்போம்.

ஒரு பாடல் உருவான பிறகு, அந்த பாடல் ஒருவருக்கே பிடிக்கவில்லை என்றாலும் அதை நிராகரித்து விடுவோம். புதிய பாடலை உருவாக்குவோம்.. அதுதான் எங்கள் குழு பழக்கம்..சில நேரங்களில், ஒரு பாடலின் கடைசி வரிகளை முடிக்க முடியாமல் சிக்கல் ஏற்படும். அதே நேரத்தில், நமக்குக் கிடைத்த பாடல் வரிகளை வைத்து, சாட் ஜிபிடியிடம் கொடுத்து, 'இந்த வரிகளுக்கு பொருந்தும் புது இரண்டு வரிகள் எழுது’ என்று சொல்வேன். சாட் ஜிபிடி எனக்கு பத்து வாய்ப்புகள் கொடுக்கும். அதில் இருந்து ஒரு வரியை தேர்ந்தெடுத்து, அந்த பாடலை முடித்து விடுவேன்.. மேலும் நான் சாட் ஜிபிடியில் பிரீமியம் மெம்பர்ஷிப் எடுத்துள்ளேன். இசையில் சிக்கலான சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், அது பிரச்சனையை விட, புதிய தீர்வை தரும் உதவிக்கருவியாக இருக்கிறது. நம் மனதில் ஏதாவது ஒரு யோசனை வந்தால், சாட் ஜிபிடி இன்னும் பன்முகமாக சிந்திக்க வைக்கிறது" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சாதாரணமாக பத்து இட்லி சாப்பிடுவேன்.. ஆனால் இப்போ..! நடிகை கேப்ரில்லா சார்ல்டன் ஓபன் டாக்..!
இப்படி செய்வது இசை உலகில் புதிய தொழில் நுட்ப ஒத்துழைப்பு என்றே சொல்லலாம். ஒரு ஏஐ உதவிக்கருவியை, படைப்புத் திறனுக்கான துணையாகப் பயன்படுத்துவது என்பது, இனி இசையமைப்பாளர்களின் புதிய இயல்பாக மாறிவரும் என்று தெரிகிறது. இப்படியாக இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய செயல்பாடுகள் மற்றும் அழுத்தங்களை சமாளிக்கும் புத்திசாலித்தனமான வழிமுறைகளை மிக நேர்மையாகக் கூறியுள்ளார். ஒரு உலக நீண்ட ஐடியா எனும் கருவியை, தன் கலைஞனாகும் பயணத்தில் துணையாக பயன்படுத்தும் இவரது அணுகுமுறை, இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு ஒரு புதிய ஒளிச்செல்வமாக மாறி உள்ளது.. ‘கூலி’ பாடல்களில் கவனிக்கப்படும் புதிய வார்த்தைகள், வித்தியாசமான தாளங்கள், மற்றும் தரமான எழுத்துப்பணி, இப்போது தெரிகிறது..

அதற்குப் பின்னால் மனிதர்கள் மட்டுமல்ல, மெஷின்களும் பங்கு வகிக்கின்றன என்பதை. ஆகவே அனிருத் ப்ளஸ் ஏ.ஐ. கூட்டணியில் வரும் காலத்தில் இன்னும் எத்தனை மாஸ் ஹிட்ஸ் நம்மை மிரள வைக்க காத்திருக்கின்றன என்பது பார்க்கவே ஆர்வமாக உள்ளது.
இதையும் படிங்க: ஒரு காலத்தில் வில்லன்.. இன்று சர்வதேச விருது வென்ற இயக்குநர்..! சவாலில் ஜெயிக்க உருவான படம் ஹிட்..!