தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்துவரும் நடிகர்களில், ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகராக திகழ்பவர் தான் குட்டி தளபதியான சிவகார்த்திகேயன். இவர், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தனது 23-வது படமான 'மதராஸி'-யில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, படத்தையொட்டிய போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த படம், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களிலிருந்து மிகவும் மாறுபட்ட, பரபரப்பான, உணர்வுமிக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. ‘மதராஸி’ திரைப்படத்தில் ருக்மினி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார்.
அவருடன், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பெயர் பெற்ற விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமான டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முக்கிய பங்களிப்புகளை வழங்குவதால், படம் பான் இந்தியா ரீதியில் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் ‘மதராஸி’க்கு இசையமைத்துள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். இது, அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ஏழாவது படம். இவர்களது கூட்டணி இதற்கு முன்னர் ‘ரெமோ’, ‘டாக்டர்’, ‘டான்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் வெளியாகவுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள், படத்தின் உணர்வுப் பாய்ச்சலை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட படத்தை தயாரித்துள்ளது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம். இந்த நிறுவனம் இதற்கு முன் பல வெற்றிப் படங்களை வழங்கிய அனுபவமாக பார்க்கப்படுகிறது. ‘மதராஸி’ படத்தில் தயாரிப்பு தரம், தொழில்நுட்பம், காட்சிகள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளன எனக் கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவு, கலை அமைப்புகள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை அனைத்தும் ஹைஸ்டான்டர்டில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சில காட்சிகள், ரசிகர்களின் பார்வையை பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்க 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இது, சிவகார்த்திகேயனின் முதல் பான் இந்தியா ரிலீஸ். இந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் முன்பே, படக்குழு ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதமாக ‘கிளிம்ப்ஸ் வீடியோ’ ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. அந்த வீடியோ நாளை வெளியாகவுள்ள 'கூலி' திரைப்படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் மிகவும் யூனீக் முயற்சியாக பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவரும் 'கூலி' திரைப்படத்திற்காக திரையரங்குகளில் கூடும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு, 'மதராஸி' படத்தையும் பெரிதும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடன் இப்பட கிலிம்ஸ் வீடியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. ‘மதராஸி’ திரைப்படம் குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் புதிய லுக், புதிய ஸ்டைல் ஆகியவற்றுடன் வருகிறார் என்பதும், இயக்குநர் முருகதாஸ் தன் முந்தைய படங்களைவிட ஒரு முழுமையான மாற்றத்துடன் திரும்பியிருப்பதையும் பற்றிய தகவல்கள், ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தாரா..? விஜயை தொடர்ந்து ரஜினி படத்திலும் கேமியோ..வா..!
படத்தின் பிக்பஜெட், ஆக்ஷன் சீன்கள், உயர்தர VFX, சண்டைக் காட்சிகள் உள்ளிட்டவை அனைத்தும், தமிழ் சினிமாவை இன்னொரு படி மேலே கொண்டு செல்லும் முயற்சி எனக் கூறப்படுகிறது. ஆகவே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். எனவே ‘மதராஸி’ படம், சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வலிமையான முயற்சி என்ற வகையில் பார்க்கப்படுகிறது. படம் வெளியாகும் முன்பே, ‘கூலி’ படத்தின் இடைவேளையில் ‘கிளிம்ப்ஸ் வீடியோ’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஒரு வகையில் மாஸ்டர்ஸ்ட்ரோக் மார்க்கெட்டிங் எனலாம். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, செப்டம்பர் 5-ம் தேதிக்கு முன் ‘மதராஸி’படத்தின் அதிரடியை உணர வைக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், ‘கூலி’ பட வெளியீட்டு நாளான நாளை தான் ‘மதராஸி’ ரசிகர்களுக்கு புதிய பரிசாக மாறும் முன்னோட்டம் திரையரங்குகளில் ஒலிக்கவிருக்கிறது. இதற்காக திரையரங்குகள், ரசிகர்கள், சினிமா வட்டாரம் என அனைவரும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: “ஓ காட் பியூட்டிஃபுல்” பாடல் ப்ரோமோ...! சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றிய சுதாகர்..!