தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை என்றால் அவர்தான் அனுஷ்கா ஷெட்டி, ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இப்படி தனது அழகு, நடிப்பு திறமை மற்றும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களின் மூலம் பிரபலமான அனுஷ்கா, குறிப்பாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகி அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தப் படத்தில் 'தேவசேனா' என்ற கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்து இருக்கிறார். அப்படி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்ற “பாகுபலி” படம், 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இன்று பத்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது.
இந்த விழாவை மிக பிரமாண்டமான முறையில் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இயக்குநர் ராஜமௌலி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாகவே மாறியது. ஆனால் ரசிகர்களும் ஊடகங்களும் அதிர்ச்சியடையச் செய்த விஷயம் என்றால் பாகுபலியின் முக்கியமான கதாபாத்திரத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா ஷெட்டி, இந்த விழாவில் காணப்படவில்லை என்பது தான். இந்த நிகழ்வில் அவரது வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இல்லாமலிருப்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. இதன் பின்னணி தொடர்பாக தற்போது தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, அனுஷ்கா கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து இடைவெளியை எடுத்துள்ளார். பல வருடங்களாக திரையுலகில் பிசியாக இருந்த அவர், தற்போது சில படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்து இருக்கிறாம். அதுமட்டுமின்றி, கடந்த சில வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க அவர் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாகவே, இவர் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் இருக்கிறார் என்பது தான் தற்போது வெளியான தகவலாக இருக்கிறது. மேலும், சமீபத்தில் அனுஷ்கா தயாரிப்பாளர்களிடம் கூறியதாக ஒரு தகவலும் பரவி வருகிறது. அதன்படி, " என் உடல் தோற்றம், உடலைப் பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் அதிகம் எழுவதால், முக்கியமான நிகழ்ச்சிகள் தவிர, நான் பொதுமக்கள் முன் வர விரும்பவில்லை. என் புதிய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் போல பிரதானமான சூழ்நிலைகள் இருந்தால் மட்டுமே வருவேன்" என அவர் கூறியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்ககளில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மொத்தமாக டாட்டா காட்டிய அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..! வெளியீட்டு தேதி ஒத்திவைப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!
இந்த நிலையில், பாகுபலி படத்தின் 10ம் ஆண்டு விழாவும் அவர் தவிர்த்ததற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில், புகைப்படங்களை வைத்து தேவையில்லாத விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்கவே அவர் தற்போது வெளியில் அதிகம் வருவதில்லை என்பதும் தெளிவாகின்றது. இந்த சூழலில், அனுஷ்கா சமீபத்தில் “மிஸ்ஸ் ஷெட்டி மிஸ்டர் போலி” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், அவரின் நடிப்புத் திறமை குறித்து விமர்சகர்களும் ரசிகர்களும் அவரை பாராட்டியே பேசினர். இதனால், அவர் திரையுலகில் மீண்டும் ஒரு மெயின் ஸ்ட்ரீம் நடிகையாக வரமுடியும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாகுபலி விழாவை தவிர்த்து அவர் எடுத்த முடிவு, ரசிகர்கள் மனதில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அவரது தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் அவரது தற்போதைய மனநிலையும் உடல்நலத்தையும் கவனத்தில் கொண்டு ரசிகர்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே உண்மை. மீண்டும் அனுஷ்கா திரையில் கலக்க வேண்டுமானால் அவரது ஆரோக்கியம் மற்றும் உறுதியான ஆதரவு மிகவும் அவசியம்.

எனவே அவரது மனநிலை மற்றும் நலன் முக்கியம் என்பதை ரசிகர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க: கோடி கணக்கில் பேசப்பட்ட பேரம்... ஓடிடி வசமானது அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..!