விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்தத் தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், வழக்கமான சீரியல் கதைக்களத்தில் இருந்து சற்று மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் அய்யனார் துணை.
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. குடும்ப உறவுகள், காதல், எதிர்பாராத திருப்பங்கள் என சுவாரஸ்யமாக நகர்ந்து வரும் இந்தத் தொடர் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போதைய கதையில் சந்தா மற்றும் சேரன் இருவரும் ஹனிமூனுக்காக தனியாகச் சென்றுள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பயணம் அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமையும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ஹனிமூன் முடிவதற்குள் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படப்போவது போன்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவர்களது பயணத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திரையுலகில் அடுத்த பெரும் சோகம்..!! ரோஜா, அந்நியன் பட நடிகை வத்சலா ராஜகோபால் காலமானர்..!
மற்றொரு பக்கம், நிலாவுக்கு வளையல் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சோழன் ஒரு வேலையைச் செய்கிறார். அந்த வேலையின் மூலம் அவருக்குப் பணமும் கிடைக்கிறது. இதற்கிடையில், படம் பார்க்கச் செல்லும் இடத்தில் பாண்டி, வானதியைப் பார்த்து அதிர்ச்சியடைவாரா என்ற கேள்வியும் கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வானதியைப் பார்த்ததும் பாண்டி என்ன செய்வார், இதனால் அடுத்ததாக ஏதேனும் பிரச்சனை வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படி சீரியலில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், நடிகை மதுமிதா அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.விஜய் டிவி என்றாலே சீரியல்களைத் தாண்டி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 10 நிகழ்ச்சியும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு வந்ததா என்று அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அய்யய்யோ, விட்டுடுங்க! எனக்கு அந்த ஷோ செட் ஆகாது. எனக்கு சண்டை போடவே பிடிக்காது. ஏதாவது பிரச்சனை வந்தால் கூட, நான் தான் தப்பு செய்தேனா, மன்னிச்சிடுங்க என்று சொல்லிவிடுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்னுடைய கப் ஆஃப் டீ கிடையாது” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே ஏற்படும் சண்டைகள், வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் எனப் பல விஷயங்கள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். ஆனால், தனக்குச் சண்டை போடுவது பிடிக்காது என்றும், பிரச்சனை ஏற்பட்டால் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவேன் என்றும் மதுமிதா வெளிப்படையாகக் கூறியிருப்பது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் மதுமிதா, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவரது பதில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பேட்டி தற்போது அய்யனார் துணை ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு..!! நெகிழ்ச்சியுடன் இயக்குநர் வெளியிட்ட பதிவு..!