தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் திட்டமிட்டு தப்பிச் சென்றனர். அவர்கள் ஒருவருக்கு வலிப்பு வந்தது போல் நாடகம் ஆடினர். அதற்காக சிறைக் காவலர் உள்ளே வந்தபோது அவரைத் தாக்கி சாவியைப் பிடுங்கி முக்கிய வாயிலைத் திறந்து வெளியேறினர். சில காவலர்கள் காயமடைந்தனர்.
இது மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக காவல்துறை தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. 17 தனிப்படைகள், சிறப்புப் படைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சோதனைகள் நடைபெற்றன. முதல் நாளே பலர் பிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அடுத்த நாள்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இறுதியில் 15 பேர் பிடிக்கப்பட்டனர். மீதமுள்ள இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனால் தப்பிய அனைத்து 17 கைதிகளும் 43 மணி நேரத்துக்குள் மீண்டும் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். அவரது இடத்துக்கு கே. சங்கர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தேனியில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். சிறைத்துறை டிஜிபியை விட துறை சார்ந்த அமைச்சருக்கே முழு பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு முழு தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “இப்படியே போனா அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டீங்க...” - தவெகை பகிரங்கமாக எச்சரித்த கே.பி.முனுசாமி...!
கலையரசன் கைதுக்கு போலீஸ் செய்த தவறு என சட்டத்துறை அமைச்சர் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினார். போலீஸ் ராஜ்யத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தறிகெட்ட அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு செயல்படுகிறது எனவும் சரமாரி குற்றச்சாட்டுகளை ஜெயக்குமார் முன்வைத்தார். மேலும், சோப்பு, ஷாம்புவால் ஆறுகளில் நுரை வருவதாக கூறிய அமைச்சருக்கு விருதே கொடுக்கலாம் என்று கிண்டலடித்தார்.
இதையும் படிங்க: கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.? "சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு"... சாடிய EPS..!!