பாலிவுட்டில் 'தங்கல்' திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை பாத்திமா சனா ஷேக். அமீர் கான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை பாத்திமா நடித்த மூத்த மகளின் கதாபாத்திரம், அவரை ரசிகர்களிடையே எளிதாக கொண்டு சென்றது. இந்த சூழலில், இந்த கதாபாத்திரத்தில் இயற்கையான நடிப்புடன் களத்தில் வந்த பாத்திமா, ரசிகர்களின் பாராட்டுகளையும் வெகுவாக தட்டிச் சென்றார். ஆனால், சமீபக் காலமாக அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பங்களிக்கும் திரைப்படங்கள் மற்றும் அவருடைய நடத்தை ஆகியவை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், படப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகை பாத்திமா சனா ஷேக், " மேடையில் இருந்த மற்றொரு நடிகரை பின்புறமாக உரசியது, அந்த நேரத்தில் மைக்ரோஃபோனை கையில் வைத்திருந்த அவர், சில ஆபாச சைகைகளை செய்ததோடு, உதட்டை காட்டி, சமூகவளத்தில் ஏற்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளை பேசியதாக" செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்தை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக "நடிகை பாத்திமா சனா ஷேக் பொது நிகழ்ச்சியில் இப்படி செய்வது முற்றிலும் ஏற்புடையதல்ல" எனக் கூறி, கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் "இது ஒரு பிரபல நடிகையின் பொறுப்பற்ற நடத்தை", " பெண்களுக்கு இவர் inspiration இல்லை, warning" என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மிகவும் ஆத்திரத்துடன் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக "நடிக்கத் தெரியாத அவரை எல்லாம் வைத்து தான் ப்ரோமோஷன் பண்ணனுமா?" என பலரும் விமர்சித்து வருகின்றனர். அனால் இதனை சட்டை பண்ணாத பாத்திமா சனா ஷேக், "எவ்வளவோ பார்த்துட்டோம்… இதெல்லாம் சும்மா ஜுஜுப்பி என அலட்சியமாக" பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரசிகர்களை தொடர்ந்து சில பாலிவுட் வட்டாரங்களும், "பிரபலமானவர்கள் மேடையில் பேசும்போது சிறிது கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும். சமூகத்துக்கு முன்னே ஒரு ரோல் மாடல் மாதிரியாக இருக்க வேண்டியது முக்கியம்" என பாத்திமாவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது இவரது இந்த அநாகரீக செயல் பாலிவுட்டில் பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரவில் கேட்ட அலறல் சத்தம்...கன்னட சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கு கத்திக்குத்து..! கணவன் வெறிச்செயல்..!
இதற்கிடையில், பாத்திமா சனா ஷேக்கின் ஆதரவாளர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாத்திமாவின் இந்த செயல் அவரது எதிர்கால திரைப்படங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய திரைப்படம் ஒன்று இறுதி கட்டத்தில் உள்ளது. அந்தப் படத்தின் ப்ரொமோஷன்களில் அவர் பங்கேற்பாரா அல்லது இந்த சம்பவத்தின் விளைவாக அதில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். மொத்தத்தில், நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம், தற்பொழுது சமூக ஊடகங்களில் ஏற்பட்ட தாக்கம் மிகுந்த விவாதமாக மாறியுள்ளது.

பிரபலங்களின் ஒவ்வொரு செயலும் தற்போது பொதுவாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பதற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு தான் இது. பாத்திமா சனா ஷேக், இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை சிவாங்கி..! இடையழகில் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!