கன்னட சின்னத்திரை உலகில் “அம்ருததாரா” உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமான நடிகை தான் ஸ்ருதி இவரது முழுப் பெயர் மஞ்சுளா, தற்போது குடும்பத்திலேயே நடந்த கொடூரத் தாக்குதலால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 20 ஆண்டுகளாக திருமண உறவில் வாழ்ந்த ஸ்ருதி – அம்பரீஷ் தம்பதிக்குள் ஏற்பட்ட திருமண விரிசல், தற்போது அவரது உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.
அப்படி இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை கீழே பார்ப்போம். பெங்களூருவில் அனுமந்த நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நடிகை ஸ்ருதி, கணவர் அம்பரீஷுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஏப்ரல் மாதம் தன் அண்ணனின் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். அந்த சமயத்தில் தன்னுடைய இரண்டு மகள்களையும் தன்னுடன் அழைத்துச் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு, கடந்த ஜூலை 3-ம் தேதி இருவரையும் சமாதானப்படுத்தினர். அப்போது அம்பரீஷ், "இனிமேல் எந்த சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். குழந்தைகளுடனும் மனைவியுடனும் அமைதியாக வாழ விரும்புகிறேன்" என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில், ஸ்ருதியும் தனது மகள்களுடன் மீண்டும் கணவருடன் வாழ தொடங்கினார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல நிலைமை திரும்பவும் மோசமாகவே மாறியது. அம்பரீஷ்-க்கு ஸ்ருதியின் நடத்தையில் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டதுடன், இவர்களுக்குள் அடிக்கடி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தொடர்ந்து எழுந்துள்ளன. இப்படி இருக்க நேற்று, மீண்டும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் பெரிதாக, ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அம்பரீஷ், கட்டுப்பாட்டை இழந்து, ஸ்ருதியை அடித்துத் தாக்கி இருக்கிறார்.. மேலும் ஆத்திரம் தீராமல் கத்தியைக் கொண்டு குத்த முயன்றார். அவரது இந்த தீடீர் தாக்குதலால், நடிகை ஸ்ருதியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கத்திக்குத்து காரணமாக, அவரது உடலில் அதிகப்படியான ரத்தம் வெளிவர தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரது நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை சிவாங்கி..! இடையழகில் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும், தங்களது கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அம்பரீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “நடத்தையில் சந்தேகம்” மற்றும் “பண நெருக்கடி” ஆகியவை தான் தாக்குதலுக்கான காரணமாக இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள, பெங்களூரு மேற்கு மண்டல காவல்துறையினர், குடும்பத்தினரிடமும், அண்டை வீட்டாரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை ஸ்ருதி மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கலக்கல் உடையில் நடிகை பிரியங்கா மோகன்..! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!