தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் வருபவர் தான் நடிகை நித்யா மேனன், இப்படி இருக்க, இந்த மாதம் மக்கள் செல்வன விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்த அட்டகாச திரைப்படமான "தலைவன் தலைவி" படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனுஷுடன் இணைந்து இவர் நடித்துள்ள புதிய திரைப்படமான 'இட்லி கடை' மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கு முன் இவர்களது கூட்டணியில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற காரணமாக அமைந்தது.
இப்படி 'திருச்சிற்றம்பலம்' படத்தில் கதாநாயகி 'ஷோபனா'வாக வந்த நித்யா, தனது இயல்பான நடிப்பால், சிரிப்பும், ஆவேசமும், கருணையும் கலந்த வேடத்தில் அருமையாக நடித்து பலரது மனதைக் கொள்ளை கொண்டு சென்றார். இப்படி இருக்க, தற்போது மீண்டும் 'இட்லி கடை' திரைப்படத்தின் மூலம் மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் நித்யா மேனன். இந்த படம், உணவகங்களை மையமாகக் கொண்டு, சாதாரண மக்கள் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு நகைச்சுவை கலந்த உருக்கமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நித்யா மேனன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'இட்லி கடை' படத்தின் ஷூட்டிங் அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் பேசுகையில், " இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக, நான் மாட்டு சாணம் சுத்தம் செய்யும் வேலையை செய்து நடித்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நான் அப்படிச் செய்தேன். அதுவும் மிகவும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதால், எந்த தயக்கமும் காட்டாமல் அப்படியே செய்தேன். அது மட்டுமல்ல, அந்தக் காட்சியை முடித்த பிறகு, நான் நேராக தேசிய விருது பெறுவதற்காக டெல்லி செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.

எனவே, சில நேரங்களில் நகங்களில் சாணம் கூட இருந்தது. அதை நினைக்கும் போது எனக்கு இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. வாழ்க்கையில் சில தருணங்களை நம்மால் மறக்க முடியாது அது நினைவில் அப்படியே நிறைந்திருக்கும், அப்படி பட்ட ஒன்றுதான் இந்த நிகழ்வு எனக்கு" என நித்யா மேனன் வேடிக்கையாக பேசினார். இந்த சூழலில், 'இட்லி கடை' திரைப்படம், ஒரு சிறிய நகரத்தில் உள்ள உணவகத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரம்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஷாக்கில் இசைஞானி..!
உணவகம் என்பது வெறும் ஒரு இடமல்ல, அது பல்வேறு சமூகங்களை, வாழ்க்கை முறைகளை ஒன்றிணைக்கும் ஒரு இடம் என்பதை காட்டும் விதமாக, இந்தப் படம் இருக்கும் என சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் கூட்டணிக்கு 'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான இயல்பான கெமிஸ்ட்ரி, பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இப்போது 'இட்லி கடை' படத்திலும் அதே அளவிலான உணர்வுபூர்வமான நடிப்பு, நகைச்சுவை மற்றும் சமூக பார்வை என அனைத்தும் கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளுக்கு பின் 'இட்லி கடை' திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்-படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் முதலானவை விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே, நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஜோடியின் 'இட்லி கடை' திரைப்படம், சாதாரண கதையிலிருந்து வெளிவந்து, வாழ்க்கையின் அழுக்குள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு சமூகப் படம் எனத் தெரிகிறது. நித்யாவின் அற்புதமான நடிப்பை பார்க்கும் ரசிகர்கள் இதை ஒரு சாதாரண காமெடி காதல் படம் என்று எண்ணாமல், வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை சித்தரிக்கும் படமாக பார்ப்பர்.

ஆகவே 'இட்லி கடை' வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கும் நிலையில், நடிகையின் விரலிலிருந்த சாணம், படம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது.
இதையும் படிங்க: என்ன பிரபுதேவா - வடிவேலு ரீயூனியனா..! ரசிகர்களின் கனவை நினைவாக்க வரும் புதிய ஹார்ட் டச் படமா.. மே..!