தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி 2000-ம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை, பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இருவரும் இணைந்து நடித்த காதலன், எங்கள் அண்ணா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களில், காதலும், காமெடியும், கலகலப்பும் கலந்து, ரசிகர்களை அதிகளவில் ரசிக்க வைத்திருந்தன. இவர்கள் இருவரும் ஒவ்வொருவராக தனித்தனி துறைகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் என்றே கூறலாம். காரணம், பிரபுதேவா திரையுலகில் ஒரு நடன இயக்குநராக புகழ் பெற்றாலும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை சினிமாவில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக நிலைநாட்டி கொண்டார்.
குறிப்பாக இவர் போக்கிரி, வில்லு, தேவி, முகன் என பல வெற்றிப் படங்களையும் சினிமாவில் கொடுத்துள்ளார். சினிமாவில் இவர் இப்படி இருக்க, மற்றொரு பக்கம், வைகைப்புயல் வடிவேலு, தமிழ்ச் சினிமாவின் காமெடி மன்னனாக வலம் வருகிறார். இப்படி, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அதற்கேற்ற காமெடி வசனங்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்த ஒப்பற்ற கலைஞராக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட வடிவேலு-க்கு எந்த சந்தர்ப்பத்திலும் சிரிக்க வைக்கும் திறன் அதிகமாகவே உண்டு" என்று உலகநாயகன் கமல்ஹாசன் கூட சில நேரங்களில் தெரிவித்திருந்தார். இப்படி பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபுதேவா மற்றும் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடியுமா..! ஆம்.. மக்களின் விருப்பமாக இருக்கும் இவர்கள் இருவரது காம்போவில் புதிய படம் வரப்போகிறது என்ற இனிப்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய படத்தை ‘டார்லிங்’, ‘100’, ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்தின் தயாரிப்பை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தாயாரிக்க இருக்கிறார். எனவே பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி கடந்த சில வருடங்களாக திரையில் காணப்படவில்லை. இவர்கள் கடைசியாக நடித்தது 2009ம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்தில் தான். அதில் வடிவேலு நடித்த “பரோட்டா” சீன் இன்னும் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்கில் உள்ளது. அதற்கு முன் 'போக்கிரி'-யிலும் இவர்களது நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும், இவர்கள் இணைந்து நடித்த ‘மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ’ போன்ற படங்களில், காதலுக்கே புதிய முகம் கொடுத்தது போல, வடிவேலுவின் வேடிக்கைகள் அந்த காலத்தில் மிகவும் வேடிக்கையாக மக்கள் மத்தியில் பேசப்பட்டன.
இதையும் படிங்க: இனி உங்க கிட்ட பேசமாட்டேன்.. கோபத்தில் கண்கலங்கி சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா..! என்ன நடந்தது..?
இந்த நிலையில் புதியதாக இவர்கள் இருவரும் நடிக்க இருக்கும் இப்படத்தின் இயக்குநராக இருக்கும் சாம் ஆண்டன், அவருடைய படங்களில், இளைய தலைமுறையின் செயல்பாடுகள் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்குபவர். 'டார்லிங்' படத்தின் மூலம் ஹாரர் காமெடி வகையில் நன்றாகப் பஞ்ச் கொடுத்தவர், ‘100’ படத்தின் மூலம் டெக்னாலஜி சார்ந்த ஆச்சர்யங்களை கொடுத்தவர், இப்போது பிரபுதேவா – வடிவேலு ஜோடிக்கு கதை எழுதுவது என்றால், நிச்சயம் அது பரபரப்பும், சிரிப்பும் அடங்கிய அட்டகாசமான கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. ஆகவே, பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் தனித்தனியாக பல வெற்றிகளை கண்டிருந்தாலும், அவர்கள் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களுக்கு அவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்துகின்றன. இது வெறும் ஒரு சாதாரண காமெடி படம் அல்ல, தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான கலகலப்பான முகங்கள் மீண்டும் சந்திக்கின்ற ஒரு அழகான தருணத்தை பிரதிபலிக்க போகிற படம். சாம் ஆண்டனின் இயக்கத்தில், பிரபுதேவா மற்றும் வடிவேலுவின் கூட்டணியில், டைமிங் காமெடி மற்றும் வித்தியாசமான கதை அம்சத்துடன் இப்படம் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும்.

விரைவில் இப்படத்தின் முழு அறிவிப்புடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் “பிரபுதேவா – வடிவேலு ரீயூனியன்” என்ற ஹேஷ்டேக்கை பரப்பத் தொடங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரங்களை மீண்டும் நினைவுபடுத்த உள்ள இந்த படம், நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: நடிக்கும் பொழுது தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா..! நடிகை ரம்பா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!