தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இன்று அதிகமாக பிரபலமடைந்து வரும் சூழலில் சமீப காலக்கட்டத்தில் தனது தனித்துவமான படைப்புகளால் சினிமாவில் மட்டுமல்லாமல் மக்கள் மனதிலும் தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் தான் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ போன்ற சமூகம் மற்றும் அரசியல் அடையாளங்கள் கொண்ட கருத்து நிறைந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமலலாம் இப்போது, அவர் தனது அடுத்த படமான 'பைசன் காளமாடன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஹீரோவாக, நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்பது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தி உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அதிரடியான பயணத்தை தொடங்கி உள்ள துருவ் விக்ரம், ஆரம்பத்திலிருந்தே தனக்காக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அசத்தலான நடிப்பை காட்டி வருகிறார். இப்போது மாரி செல்வராஜ் போன்ற ஒரு கருத்துப் பூர்வமான இயக்குநருடன் அவர் இணைந்து நடிப்பது, அவரது சினிமா பயணத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் போன்ற திறமையான நடிகர்கள் இடம்பெற்று இருப்பதால் இப்படம் சினிமாவில் தரமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க, சமீபத்தில் வெளியான 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இதில் நடிகர் துருவ் விக்ரம் நடித்திருக்கும் கதாபாத்திரம் வன்முறைக்கு எதிரான வீரத்தையும், வலிமையையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. மேலும், பசுமை நிலங்கள், கால்நடைகள், கிராமப்புற வாழ்க்கை என பிராதானமாக இருக்கும் 'பைசன்' எனும் மிருகத்தின் வருகை, இப்படத்தில் எதையாவது தனித்துவமாக சொல்ல முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆகையால் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இயக்குநர் மாரி செல்வராஜ், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி, தீபாவளி பண்டிகை நாளில் திரைக்கு வருவதாக அறிவித்தார். தீபாவளி காலத்தில் வெளியாகும் படங்கள் பொதுவாக பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் ‘பைசன் காளமாடன்’ படமும் உலகமெங்கும் தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெறும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் மீதான ஹைபை மேலும் உயர்த்தும் வகையில், சமீபத்தில் வெளியான புதிய அறிவிப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'தி வைவ்ஸ்'..! அதிரடியான ரோலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!
அதில் தமிழ்நாடு மாநிலத்தின் வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாம். பல்வேறு வெற்றிப் படங்களை விநியோகம் செய்துள்ள பைவ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் என்பது, படத்தின் மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் படக்குழு, இந்த செய்தியை முக்கிய போஸ்டர் மூலமாக பகிர்ந்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மாரி செல்வராஜ் கடந்த படங்களில் சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருடன் பணியாற்றியுள்ளார் என்பதால், இம்முறையும் ஒரு வலுவான இசை அமைப்பாளர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதும் மாரி செல்வராஜ் எழுத்து பாணியில், சமூக விமர்சனமும் உணர்வும் கலந்திருக்கும். இதுவும் அந்த லைனிலேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ‘பைசன் காளமாடன்’ படம் ஒரு வித்தியாசமான தலைப்பை கொண்டுள்ளது. அதற்கேற்ப, வித்தியாசமான கதையமைப்பை கொண்டிருக்கக்கூடிய திரைப்படம் இது என தெரிகிறது. தரமான திரைக்கதைகள், சமுக நோக்கம் கொண்ட இயக்கம், மற்றும் திறமையான நடிகர்கள் ஆகியவை ஒருங்கிணையும் இந்த படத்தில், துருவ் விக்ரம் தன் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டப்போகிறார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இப்படம் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படைப்பு என்பதாலேயே, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உருவாகியுள்ளது. மேலும், இந்த வருட தீபாவளி நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிசாக ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இருக்கும்.
இதையும் படிங்க: ரன்வீர் சிங், பாபி தியோலுடன் நடிக்கும் ரைசிங் ஸ்டார் ஸ்ரீலீலா..! பாலிவுட்டில் அதிரடி என்ட்ரி.. குஷியில் ரசிகர்கள்..!