சீயான் விக்ரமின் மகனாக திரையுலகிற்கு அறிமுகமான துருவ் விக்ரம், தனது திறமையான நடிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'பைசன்' திரைப்படத்தில் நடித்த துருவ் விக்ரம், இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுடன் கூடிய ஒரு படமாக உருவாகியுள்ள 'பைசன்', துருவ் விக்ரமின் நடிப்பின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபோஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததையடுத்து, துருவ் தனது அடுத்தப் படத்திற்கான திட்டங்களில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே, அவரது அடுத்த திரைப்படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த அப்டேட்டின்படி, துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் முன்னணி இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆகவே 'தக் லைஃப்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும், வசூலிலும் விமர்சன ரீதியாகவும் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, மணி ரத்னம் மீண்டும் தனது பலமான பகுதியான காதல் கதைகளுக்குத் திரும்புகிறார். காதல், கனவு, இசை, இயற்கை என அனைத்திலும் தனது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார். இப்படம் ஒரு இளைய காதல் கதையாக உருவாக உள்ளது.
இதில் புதிய தலைமுறையின் பிரபல நடிகர்களை இயக்கும் திட்டத்தில், ஹீரோவாக துருவ் விக்ரம் தேர்வாகியுள்ளார் என்பது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. துருவுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை, கன்னட திரையுலகில் பலரது கவனத்தை ஈர்த்த நடிகை ருக்மிணி வசந்த் தான். ‘சாப்ட சக்கரடாச்சே எல்லோ' எனும் இரு பகுதிகள் கொண்ட காதல் கதையின் மூலம் ரசிகர்களைத் தன் பக்கம் திருப்பிய இவர், தற்போது தமிழில் இடம் ரசிகர்களின் மனதை பிடிக்க தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘ஏஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ருக்மிணி, தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ என்ற படத்தில் நடித்து இருகிறார்.

இப்படி இருக்க மணி ரத்னத்தின் படத்தில் கதாநாயகியாக நடிப்பது, ஒரு இளம் நடிகையின் கனவு நிறைவேறும் தருணமாகும். அவரது மென்மையான நடிப்பு, அழகு மற்றும் மேடை அழுத்தம், இந்த காதல் கதையில் மிகச்சிறந்த ஜோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காதல் திரைப்படத்தின் இசையை அமைக்கிறார் நம்முடைய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். மணிரத்னம் மற்றும் ரஹ்மான் கூட்டணி என்றாலே, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அது ஒரு இசை திருவிழா என்பதில் சந்தேகம் இல்லை. 'ரோஜா' தொடங்கி 'பொன்னியின் செல்வன்' வரையிலான அவர்களின் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.
இதையும் படிங்க: நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் காளமாடன்'..! தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
அந்த வரிசையில், இளைய காதல் புனைவுகளுடன் கூடிய இந்த புதிய படத்திலும் இசையின் மூலமாகக் காதலை மேலும் உணர்வுபூர்வமாக காட்டும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த புதிய காதல் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மணி ரத்னத்தின் இயக்கத்தில், துருவ் விக்ரம் மற்றும் ருக்மிணி வசந்த் முதன்மை வேடங்களில் நடிக்க விருக்கும் இந்த காதல் படம், தமிழ் சினிமாவில் புதியதொரு கண்ணோட்டத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

மணிரத்தினம், துருவ் விக்ரம், ரகுமான் போன்றவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு சிறப்பு அனுபவமாக அமையும் எனக் கூறுவதில் மாற்று கருத்து இல்லை.
இதையும் படிங்க: எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? தேசிய தேர்வுக்குழுவை விளாசிய நடிகை ஊர்வசி..!!