தமிழ் திரையுலகில் தான் உருவாக்கியதை பிறர் பயன்படுத்தினால் காஃபி ரைட்ஸ் போடும் பழக்கம் சில வருடங்களாக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்களிடையே வலுத்து வருகிறது. இப்படி இருக்க, காமெடிகளுக்கும் டைலாக்குகளுக்கு இதுவரை காஃபி ரைட்ஸ் போடாத ஒரே நடிகர் என்றால் அது வைகை புயல் வடிவேலு தான். இதனை பற்றி அவர் கூறும்பொழுது, "நான் நடிக்காமல் இருக்கும் காலத்திலும் என் காமெடிகள் எப்பொழுது பயன்பாட்டில் இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த வரம்" என சொன்னார். இப்படி பல புகழுக்கு சொந்தமானவர் இவர்.

அப்படி காஃபி ரைட்ஸ் போடும் அளவிற்கு என்ன டயலாக் சொல்லி இருக்கிறார் என்று பார்த்தால் அவரது பாணியில் "வின்னர் திரைப்படத்தில் ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’மற்றும் ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ அதே படத்தில் ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’ மற்றும் 'போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது', ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையப்பா’ அடுத்தாக சந்திரமுகியில் ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு', சீனாதானா 001ல் ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’கிரி திரைப்படத்தில் ‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன்' மற்றும் 'பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, தலைநகரம் படத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு’, மருதமலை திரைப்படத்தில் ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி' என பலகோடி டையலாக்குகள் உண்டு.
இதையும் படிங்க: மொத்தமாக டாட்டா காட்டிய அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..! வெளியீட்டு தேதி ஒத்திவைப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!

இத்தனை டயலாக்குகளின் சொந்தக்காரரான வடிவேலுவின் திரையுலக பயணம் 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை நீடித்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்றால் அது கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தான். இப்படத்தில் தான் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பு வாழ்க்கை ஒரே ஒரு பிரச்சாரத்தில் சிறிது காலம் முடங்கி போனது. குறிப்பாக 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரச்சாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இவரது நேரமோ என்னமோ தெரியவில்லை அந்த தேர்தலில் தி.மு.க கட்சி படு தோல்வி அடைந்தது. இதனால் வடிவேலுவை புரட்டி எடுத்தனர். சிக்கலுக்குள்ளான வடிவேலு பல மாதங்களாக சினிமாவில் நடிக்க விடாமல் தடை செய்தனர். இதனால் மனவேதனையில் இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு 2021ம் ஆண்டுக்கும் மேல் திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக "மாமன்னன்" படத்தில் அட்டகாசமாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் வந்த "என்னங்க ஒண்ணுமே புரியல" என்ற டையலாக்குகள் தற்பொழுது மீம்ஸ்களில் வலம் வருகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி-யின் திரைப்படத்திலும் நடித்து இருந்தார் நடிகர் வடிவேலு. இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் வடிவேலு-ம் பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் "மாரீசன்". இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் கிராமிய பின்னணியில் ட்ராவலிங் திரில்லராக உருவான இத்திரைப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களையும் கடந்ததால், "மாரீசன்" படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இத்-திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 25ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலு மற்றும் பஹத் பாசில் காம்போவில் வெளியாகவுள்ள "மாரீசன்" பட ரிலீசுக்காக காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்" திரைப்படத்தில் நடிகர் அஜித்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!