நடிகர் அஜித் என்றாலே 'தல' என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். தற்பொழுது சில நாட்களுக்கு முன்பு "கடவுளே அஜித்தே " என்ற கோஷங்களும் பெருகி வந்தது. இதனைப் பார்த்து மன வேதனை அடைந்த அஜித் குமார், இனி தன்னை அப்படி யாரும் அழைக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அப்படி கூறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்க, பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகர் அஜித்தை பிடிப்பது என்பது அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. அந்த வகையில், சமீப காலமாக, கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித்.
இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயினி யார் தெரியுமா..! கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் போல..!

ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர். இப்படி இருக்க, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருது வாங்கி இருக்கிறார் நடிகர் அஜித். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விருதை பெற்று கொண்ட அஜித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் " நான் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை எனவும் சினிமாவில் நடிக்கும் பொழுது எந்த ரேஸ்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவையும் தீர்க்கமாக எடுத்து உள்ளேன்.

இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எனவே வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். இப்படிப்பட்ட நடிகர் அஜித் சமீபத்தில் நடித்திருந்த ஃபேன் பாய் திரைப்படமான "குட் பேட் அக்லி" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அதற்கு முன்பாக வெளியாகி இருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தத் திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடி தருமா? என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்புக்கு பலனாக இத்திரைப்பதத்தை அட்டகாசமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் நடிகர் அஜித் தனது மகனுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் படமாக இப்படம் அமைந்தது.

மேலும், நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான 'ஏகே 64' திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த சூழலில் தற்பொழுது கார் பந்தயத்தில் முழு கவனத்தை செலுத்தி வரும் அஜித், வருகின்ற அக்டோபர் மாதம் வரை சினிமாவிற்கு பிரேக் எடுத்திருப்பதாகவும் அதே சமயத்தில் 'ஏகே 64' திரைப்படத்தினை "ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்" தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்திற்கான முழு அறிவிப்பும் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் சமீபத்தில் கிடைத்து இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ஹாலிவுட்டில் நடிக்க ஆசைப்படுவதாக தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதன்படி, சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் வெளியான 'எப்1' கார் பந்தயத்தை மையப்படுத்தி வெளியான திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதை மையமாக கொண்டு நடிகர் அஜித்திடம் தொகுப்பாளர் ஒருவர், நீங்களும் கார் ரேஸில் வெற்றி பெற்று வருகிறீர்கள்... ஒருவேளை எப்1' கார் பந்தயத்தை மையப்படுத்தி திரைப்பட வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?" என கேட்டார். அதற்கு பதிலளித்த அஜித், "பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், எப்1' போன்ற படங்களின் தொடர்ச்சியில் நடிப்பதற்கு எனக்கும் அதிகமான ஆசை உள்ளது.

ஏனெனில் பொதுவாகவே நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஸ்டண்ட் காட்சிகளில் யாருடைய உதவியும் இல்லாமல் நானே நடித்து வருகிறேன். அதுப்போன்ற படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அந்த வாய்ப்பை நழுவ விடமாட்டேன்... அதுமட்டுமல்லாமல் எனக்கு ஆதரவு அளித்து வரும் எனது கோடானகோடி ரசிகர்களுக்கு இந்த வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிலளித்தார்.

இதனை பார்த்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சீக்கிரமாக உங்களை ஹாலிவுட்டில் கார் ரேஸ் படங்களில் நடிப்பதை எங்கள் கண்கள் பார்க்கும் என அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு வார்த்தை சொன்னாலும் அதை நச்சுனு சொன்ன நடிகர் அஜித்..! வெறுப்பில் ஹேட்டர்ஸ்..!