தற்பொழுது சினிமா படங்களை விட, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் முதலான ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரீஸ்களுக்கு மவுசு ஜாஸ்தியாகவே உள்ளது. அதிலும் கொரியன் ட்ராமா மற்றும் பாடல்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஏன் கொரியன் நடிகர்களையும் அவர்களது பாடல்களையும் கேட்க சிறுமிகள் வீட்டைவிட்டு வெளியேறிய செய்திகளையும் நாம் பெரும்பாலும் கேட்டு இருப்போம். அந்த அளவிற்கு கொரியன் ட்ராமாக்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் பெருகியுள்ளது.
அந்த வகையில், மிகவும் பிரபலமான கொரியன் தொடரான "A 4 Schoolgirl Detectives", "Assembly", "First Love Again", "Through the Waves", "The Flower in Prison", "Heart Surgeons" போன்ற புகழ்பெற்ற இணையத் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகையான காங்க் சே ஹா உலகை விட்டு பிரிந்தார். இவரது உண்மையான பெயர் காங்க் யே-வொன் என சொல்லப்படுகிறது. 31வயதான இவர், வயிற்றில் புற்று நோயுடன் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 2012-ல் 'Brave Guys'–ன் "Getting Farther Away" என்ற இசை கச்சேரி விடியோ மூலமாகத்தான் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் JTBC–ன் "School girl Detectives" என்ற தொடரில் முக்கிய கதாபாத்தித்தில் நடித்து பலரை கவர்ந்ததுடன் அதற்காக விருதும் பெற்றார்.பின்பு ஃபேமஸ் கொரியன் டிராமாகிய Assembly, The Flower in Prison, Through the Waves, Heart Surgeons, First Love Again, Nobody Knows போன்ற தொடர்களில் தனது அபார நடிப்பால் உலகம் முழுவதும் பிரபலமானார். அவரது இறுதியான திரைப்படமாக “In the Net” மற்றும் “Mangnaein” படங்களை நடித்து முடித்துள்ளார், இந்த படங்கள் இனி தான் வெளியாக போகிறது என்பது தான் வருத்தத்திற்குரிய காரியம்.

இப்படி இருக்க, கடந்த 2024ம் ஆண்டு அவருக்கு ஸ்டேஜ் 4 வயிற்றுப்புற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற ஆரம்பித்தார். இரண்டாவது கீமோதிரிப்பு செயல்படுத்து போதும் உடல் மிகவும் மோசமடைந்து, மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடிகை காங்க் சே ஹா உயிரிழந்தார். இந்த நிலையில், காங்க் சே ஹாவின் நண்பர்களின் பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில்" உன் மரணம் எங்களால் நம்ப முடியவில்லை, நீ அவ்வளவு பெரிய வலியை அதிகமாக அனுபவித்து கொண்டிருந்தாலும் வழக்கமான பாசிட்டிவ் சிரிப்பு, என்னுடைய வாழ்க்கையின் அனைத்து குறைகளையும் நீக்கியது.
இதையும் படிங்க: தேசிய விருது பெறுவதற்கு முன் கையில் மாட்டு சாணம் வைத்திருந்தேன்..! நடிகை நித்யா மேனன் பேச்சால் பரபரப்பு..!
நாங்கள் பல மாதங்களாக உணவில்லாமல் இருந்த போதிலும் உதவிய அன்பு… நீ எப்போதும் சொன்னது: ‘எனது கார்ட்டில் பணம் செலவு செய்யலாம்’ என்று. நீ நினைத்தை போல என் சாப்பாடு இல்லை என்ற நிலைமையை மாற்றினாய். நீ அவ்வளவு இனிமையாக இருந்தாய்…வலி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டாலும் கூட ‘நன்றி’ என்று சொன்னாயே! நானே உண்மையில் இப்போது வேதனையுடன் இருக்கிறேன்… நீ வேதனை இல்லாமல் உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்க! நீ எனக்கு தந்த பரிசுகளை நான் பாட்டிக்கு கொடுத்திருக்கிறேன்! நீ எப்போதும் என் உள்ளத்திலும் என் நினைவிலும் இருப்பாய், நான் உண்மையாகவே நல்ல தம்பியாக இருந்திருப்பேன்…கவலைப்பட வேண்டாம் அத்தை, மாமா, உக்கியா – எல்லாரையும் நன்றாக கவனிப்பேன்! " என பதிவிட்டு வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. அவர் தனது முழு புற்று நோய் எதிர்கொள்ளும் காலத்தில் கூட சிறந்த குணத்துடனும், பரிவு மனத்துடனும் இருந்தார் என பலரும் கூறிவருகின்றனர்.

நடிகை காங்க் சே ஹா – காங்க் யே-வொன் நடிப்பு, அன்பால் நிறைந்த மனித நேயம் இன்றும் பலரைத் தொட்டுள்ளது. நீங்கள் இங்கு இல்லை என்றால் கூட, உங்கள் ஞாபகங்கள் எப்போது எங்கள் மத்தியில் இருக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரம்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஷாக்கில் இசைஞானி..!