இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படம் மே 1ம் தேதி வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லன் ஜோவியல் ஜார்ஜ் என அனைவரும் நினைத்திருந்த வேளையில் பிரகாஷ்ராஜா, நாசரா அல்லது அவரது மகனா என படத்தில் யார் வில்லன் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக படமே முடிந்து விட்டது என சிலர் விமர்சித்தனர்.

இப்படத்தின் கதை தூத்துக்குடியில் ஆரம்பித்து எங்கெங்கோ அழைத்து சென்றது. பின்பு தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அம்மாவை காசிக்குச் சென்று அடக்கம் செய்கிறார்கள். எதற்காக அங்கு சென்று அடக்கம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. பின்பு அப்படியே திரும்பி பார்த்தால் படம் ஆப்பிரிக்காவிற்கு செல்கிறது. அங்கிருந்து எதற்காக அந்தமானுக்கு சென்றார்கள் என தெரியவில்லை. அப்படியே அந்தமானுக்கு சென்றாலும் வில்லன் என்ன செய்கிறார் என்று பார்த்தால் அடிமைகள் எல்லோரையும் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் படம் கொஞ்சம் புரிகிறது மிச்சம் புரியவில்லை என பலர் சொன்னாலும், படத்தை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹீரோக்களுக்காக நிக்காதீங்க.. ராணுவ வீரர்களுக்காக நில்லுங்க.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..!

இந்த நிலையில், படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக சென்னையில் ரெட்ரோ படக்குழுவினர் வெற்றிவிழா ஒன்றை தயார் செய்தனர். இந்த விழாவில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்ய உதவிய சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் கதாநாயகனான சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். இதனை சற்றும் எதிர்பாராத சூர்யா அன்பின் வெளிப்பாடாக அவர் அணிவித்த மோதிரத்தை அவருக்கே திரும்பவும் பரிசாக அளித்தார்.

இதனை அடுத்து பேசிய சக்தி வேலன், "ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா மற்றும் ராஜசேகர பாண்டியன் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை பற்றி பலர் பேசினாலும் இந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக லாபம் தந்த திரைப்படம் இது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர், பாடலாசியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கும் வைர மோதிரங்களை பரிசாக வழங்கினேன்.

அதே போல தான் சூர்யாவுக்கும் வழங்கினேன். ஆனால் அவர் அன்பின் வெளிப்பாடாக அந்த மோதிரத்தை எனக்கே திருப்பி அளித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் கடைகுட்டி சிங்கம் மற்றும் விருமன் படங்களின் வெற்றி விழாவின் போதும் தங்க சையினை பரிசாக சூர்யாவுக்கு வழங்கினேன் அதையும் திருப்பி எனக்கே அளித்துவிட்டார்.
இதையும் படிங்க: சூர்யாவின் சூன்யம்... 16 ஆண்டுகளாக அட்டர் ஃப்ளாப்... விபூதி அடிக்கும் பழைய டபரா செட்டுகள்..!