தமிழ் சினிமா மற்றும் சமூக ஊடகங்களில் சமீபகாலமாக அதிகமாக பேசப்படும் ஒரு பெயர் என்றால் அதுதான் "வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்". தன்னுடைய தன்னம்பிக்கையுடன் கூடிய காமெடிகளாலும், இணையத்தில் ரீல்ஸ் வீடியோக்களாலும் பிரபலமான திவாகர், சமீபத்தில் செய்த ஒரு சர்ச்சைக்குரிய பேச்சு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யாவையும் சூரியையும் அவமதிக்கும் வகையில் பேசும் இவரது வீடியோ, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது. இப்படி இருக்க, மறக்க முடியாத காமெடி காட்சிகளில் ஒன்றாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படத்தில், சூர்யா நடித்த வாட்டர்மெலான் சீன், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: பிரியாமணி தனது காதல் கணவருடன் என்ன செய்திருக்கிறார் பாருங்க..! இணையத்தை அதிரவிட்ட கிளிக்..!
அந்தக் காட்சியை தன்னுடைய காமெடி பாணியில் ரீ-க்ரியேட் செய்து, "வாட்டர்மெலான் ஸ்டார்" என தனக்கு சொந்தமாகப் பட்டம் சூட்டிக் கொண்டதிலிருந்து திவாகர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று தான் வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "கருப்பு" திரைப்பட டீசரில், அந்த வாட்டர்மெலான் காட்சி மீண்டும் இடம்பெற்றிருக்கிறது. இதை பார்த்த திவாகர், "சூர்யாவே என்னைக் காப்பி அடிச்சி தான் அந்த சீனை மீண்டும் ரீ-கிரியேட் செய்து இருக்கிறார்" என்று கூறி மிகவும் மோசமான முறையில் விமர்சனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திவாகரின் சர்ச்சை பேச்சு, கலாட்டா யூடியூப் சேனலில் அவர் கலந்து கொண்ட பேட்டியில் மேலும் தீவிரமானது.

தொகுப்பாளர், "உன்னை வாட்டர்மெலான் ஸ்டார் என்றே அழைக்கலாமா?" என்ற கேள்வியைக் கேட்டபோது, "அப்படின்னா நா மைக்கை கழட்டிட்டு கிளம்பிடுவேன்" என பதிலளித்தார். இந்த பதிலுக்கு பின்னர் வந்த சர்ச்சை விளைவுகள், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, அவரைப் பற்றிய நெகட்டிவ் பக்கங்களை வெளிப்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் பிரபலமும் சமூக ஊடக இன்ப்ளுவன்சராகவும் இருக்கும் ஜி.பி. முத்து, திவாகரின் இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது வீடியோவில், "நீ யாருடா பன்னிப்பயலே, சூர்யா சார் பற்றி இப்படி பேசுற?” எனத் தெளிவாக திட்டியுள்ளார். மேலும், "அவரை போய் காப்பியடிச்சார்னு சொல்வதா? சூர்யா சார் பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு?” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஜி.பி. முத்து வெளியிட்ட வீடியோவை சூர்யா ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர். வீடியோவில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், சிலரால் கடுமையானதாகவும், சரியான பதிலடியாகவும் கருதப்பட்டு வருகிறது. சிலர் ஜி.பி. முத்துவின் செயலை நியாயமாகவே பார்க்கின்றனர்.
👉🏻 G.P. MUTHU - Instagram video link -கிளிக் செய்து பார்க்கலாம்.. 👈🏻
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சிறந்த படங்களை வழங்கி வருபவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனாக, தந்தையின் நம்பிக்கையை சிறப்பாக ஏற்றுக்கொண்ட இவர், நந்தா, வாரணம் ஆயிரம், சூரர்ஃபோட்டை, ஜெய் பீம் என பல தரமான படங்களில் தனது நடிப்பால் பிரம்மிக்க வைத்துள்ளார். அதிலும் கூடுதல் பாராட்டுக்குரியது என பார்த்தால் "அகரம் அறக்கட்டளை" மூலம், பல மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். அவரது சமூக அக்கறையும், நேர்மையான வாழ்க்கைப் பயணமும், அவரை ரசிகர்களின் உள்ளத்தில் வேரூன்ற வைத்துள்ளது. இந்த நிலையில், அவரைப் பற்றிய திவாகரின் விமர்சனம், அவரது ரசிகர்களையே அல்லாமல் திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திவாகர், முன்பும் சமூக வலைதளங்களில் பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவி பிரபலங்கள், மற்றும் சில காமெடி நடிகர்கள் மீது விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார். பெரும்பாலும் அவரது மதிப்பில்லாத விமர்சனங்கள் தான், எதிர்மறையான விளைவுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சுய புகழ் வார்த்தைகள் மற்றும் பிறரைக் குறைக்கும் கருத்துகள், அவரை தற்பொழுது சிக்க வைத்துள்ளது. இன்றைய சமூக வலைத்தளங்களில், சின்ன விஷயங்கள் கூட பெரும் அளவில் பரவுகின்றன. பிரபலமாக இருப்பது மட்டுமின்றி, பொறுப்பாகவும் நடந்து கொள்வது அவசியம். ஒரு தரமான நடிகரையும், சமூக சேவையை முன்னிறுத்திய சூர்யா போன்றோரின் மீது விமர்சனம் செய்வது, பொதுமக்களிடையே தவறான கருத்துக்களாக பார்க்கப்படுகிறது. ஆகவே திவாகரின் இந்த திடுக்கிடும் பேச்சுக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, திரைப்பட ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் அவர் பொறுப்புடனும், மரியாதையுடனும் பேசவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: கோவாவில் ஒன்று திரண்ட சினிமா பிரபலங்கள்..! 90களின் மறுசந்திப்பில் உற்சாகக் கொண்டாட்டம்..!