தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை பெற்றிருப்பவர் நடிகை பிரியாமணி. இப்படிப்பட்ட இவர், கடந்த 2003-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கண்களால் 'கைதுசெய்' என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அது ஒரு கனாக்காலம், மது போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் அதீத கவனம் பெற்றார். ஆனால் 2007-ம் ஆண்டு அமீர் இயக்கிய 'பருத்திவீரன்' திரைப்படத்தில் "முத்தழகு" என்ற பஞ்சாயத்து தலைவர் மகளாக நடித்து பட்டைய கிளப்பினார், அவரின் இந்த நடிப்பு தான் சினிமாவில் அவருக்கு ஒரு முக்கிய திருப்பு முனையாய் அமைந்தது.

அந்த திரைப்படத்தில் காட்டிய இயல்பான நடிப்பு, அவருக்கு தேசிய விருதைத் தந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். பின் தமிழ் சினிமாவை விட பிற மொழி படங்களில் அதிகமாக நடித்தார். சமீபத்தில், ஷாருக்கான் நடித்த பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் திரைப்படமான 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் நடித்த கதாபாத்திரம், கதையின் முக்கியமான ஒன்றாக அமைந்தது. சினிமாவில் தொடர்ந்து கலக்கி வரும் நடிகை பிரியாமணி, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். புதிய திரைப்படங்கள், ஃபேஷன் புகைப்படங்கள், குடும்ப தருணங்கள் என பல்லாயிரக்கணக்கான தன்னுடைய வாழ்க்கையின் முக்கிய தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: கோவாவில் ஒன்று திரண்ட சினிமா பிரபலங்கள்..! 90களின் மறுசந்திப்பில் உற்சாகக் கொண்டாட்டம்..!

அதன் ஒரு பகுதியாக, தனது திறமையான நடிப்பால் பல்வேறு மொழிகள் சார்ந்த திரையுலகில் சாதனை படைத்துள்ள இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களால் மீண்டும் ஒரு முறை இணையத்தையே கவர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக, தாஜ்மகால் அருகே கணவருடன் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாகா நடிகை பிரியாமணி, தனது கணவர் முஸ்தஃபா ராஜ் உடன் தாஜ்மகாலுக்கு பயணம் மேற்கொண்ட போது, காதல் நிறைந்த சில அழகான தருணங்களை புகைப்படமாகப் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களில், தாஜ்மகால் பின்னணியில், கணவரின் கைகளைப் பிடித்து நிற்கிறார் பிரியாமணி. மேலும் ஒரு புகைப்படத்தில் அவர் கணவரின் நெற்றியில் அன்பாக முத்தமிட்டுப் போஸ் கொடுத்துள்ள அழகிய காட்சி ரசிகர்களை ஏக்கமுடன் பார்க்கவைத்துள்ளது.

இந்த காதல் முத்தங்கள் நிரம்பிய ரொமான்டிக் கிளிக்குகள், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டவுடன் ரசிகர்கள் புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குககளை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் நடிகை பிரியாமணி, தற்போது பல தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க, இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படங்கள் மூலம், பிரியாமணி தனது ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலகம் மற்றும் மற்ற பிரபலங்களும் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரியாமணி வெளிப்படுத்தும் இயல்பும், நடிப்பும், உணர்வும் அவரை ரசிகர்களின் இதயத்தில் நிலைத்திருக்க வைக்கின்றன.
இதையும் படிங்க: ரசிகர்களை மிரள வைத்த ஜேம்ஸ் கேமரூன்..! அதிரடியாக வெளியான 'அவதார்: பைர் அண்ட் ஆஷ்' டிரெய்லர்..!