உலக எமோஜி தினம், அன்று உலகளவில் உள்ள சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்ற நாளாகவும், பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நாளாகவும் காணப்படுகிறது. ஒரு காலத்தில் வார்த்தைகள் மூலமாக மட்டுமே கருத்துக்களை பகிர்ந்து வந்த சமூக ஊடகங்கள், இன்று எல்லா செய்திகளுக்கும் பதிலை முக பாவனைகள், குறும்படங்கள், ஜிஃப்கள் மற்றும் எமோஜிகள் மூலமாகவே எளிமையான முறையில் தங்களது எண்ணங்களை விரிவாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது சமூக வலைத்தளங்களில் உலா வரும் அதிகப்படியான எமோஜிகள் தான். இந்த அடையாளங்களை கொண்டாடும் நாள் தான் உலக எமோஜி தினம் என சொல்லப்படுகிறது. இப்படி பிரபலமான எமோஜிகள் வெறும் சின்னங்களாக மட்டும் பார்க்கடுவது அல்ல, அந்த எமோஜிக்கள் ஒவ்வொன்றும் ஒரு உணர்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒருவரின் முக பாவனைகள், உணர்ச்சி நிலைகள், சிரிப்பு, கோபம், சந்தோஷம், குழப்பம், அழுகை என அனைத்தையும் சிறந்த வகையில் கொடுக்கும் திறன் இந்த எமோஜிகளுக்கு உள்ளது. இவை இல்லாத எழுத்துக்களும் உரையாடல்களும் இப்பொழுது இல்லை.

ஏனெனில் உள்ளான உணர்வை வெளிப்படையாக தோன்ற வைக்கும் அளவிற்கு எமோஜிகளுக்கு இன்று மக்கள் மத்தியில் நல்ல இடம் உண்டு. இதனாலேயே, உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளப் பயனாளர்களும், பிரபலங்களும், இந்த நாளை தனித்துவமாக கொண்டாடுகின்றனர். ஆகவே இந்த உலக எமோஜி தினத்தை, கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டில் உள்ள பல பிரபலங்கள், இந்த நாளை கொண்டாடும் விதமாக, தங்களது முகபாவனைகளை பலவிதமான எமோஜி ஸ்டைல்-களில் மாற்றி அட்டகாசமான போட்டோஷூட்களை செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இவர்களது அந்த வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: "ஜெய் பீம்" பாத்தாச்சு..அடுத்து "கருப்பு" தான்..! ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மீண்டும் சூர்யா..ஜோதிகா கூட்டணி.. டீசர் பாக்கலாமா..!
இந்த நிலையில், பலரும் மகிழ்ச்சியுடன் விளையாடியபடி எடுத்த இந்த முகபாவனை போட்டோ எடுக்கும் கொண்டாட்டத்தில் நடிகை சன்னி லியோனியும் கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு அதிக கவனம் பெற்றது. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், விதவிதமான முகபாவனைகளுடன் கூடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பின் அதற்கு கீழ், "எமோஜி என்பது எப்படியெல்லாம் நம்மை பிரதிபலிக்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்" என ஒரு சிறப்பான விளக்கத்தையும் படங்களை கொண்டும் கூறியிருக்கிறார். அவரது அந்த புகைப்படங்களில், காதல் பாவனை, கோபம், அழுகை, சிந்தனை, சிரிப்பு என அனைத்து முகபாவனைகளையும் ரசிக்கக்கூடிய எமோஜி ஸ்டைலில் பதிவு செய்திருந்தார். சன்னியின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்களிடமும் வெகுவாகப் பகிரப்பட்டு வருவதால் பலரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர். ஆகவே இந்த வருட எமோஜி தினத்தில், #WorldEmojiDay, #EmojiChallenge, #EmojiWithMe போன்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியிருக்கின்றன.

இப்படி, உணர்வுகளை வார்த்தையின்றி பகிரும் ஒரு புதிய மொழி என கூறப்படுவது தான் எமோஜி. அந்த உணர்வுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலக எமோஜி தினத்தில், பிரபலங்கள் தங்கள் முகபாவனைகளுடன், ரசிகர்களை மகிழ்வித்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதில் சன்னி லியோனி தனது எமோஜி படங்களை வெளியிட்டது, ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு இணையத்தையும் கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: அனைவரையும் வீட்டில் உட்கார வைக்க போகிறது "ஜூலை-19"..! இந்த வாரம் 'ஒன்னு' இல்ல..'ஐந்து' படமாம்..!