• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதிமுகன்னா அவ்வளவு எழக்காரமா..” - அமித் ஷாவால் அப்செட்டில் எடப்பாடி... விஜயால் என்.டி.ஏ. கூட்டணிக்குள் புகைச்சல்...!

    விஜய் இந்த அழுத்தங்களுக்கு இணைவாரா அல்லது தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்துவாரா என்பதே இப்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 09:36:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amith sha master plan to TVK alliance

    பாஜக கூட்டணிக்குள் நடிகர் விஜயின் கட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன வட்டாரங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, இந்த முயற்சியில் அமித்ஷா நேரடியாக கவனம் செலுத்தி காய் நகர்த்தி வருகிறார். இன்று இரண்டு நாட்களில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரவுள்ள நிலையில், விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரிய அரசியல் கேள்வியாக உள்ளது மாறியுள்ளது.

    எப்படியாவது விஜயின் கட்சியான தாவேகாவை (தமிழக வெற்றிக் கழகம்) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பாஜக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல்வேறு வழிகளில் விஜயை தொடர்பு கொண்டு பேச முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்த முயற்சி நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பவன் கல்யாண் விஜயுடன் இதற்கு முன்பே பலமுறை பேசியதாகவும் கூறப்படுகிறது. தனது அரசியல் அனுபவத்தை உதாரணமாகக் கூறி, ஆரம்பத்தில் தனது கட்சி எதிர்கொண்ட தோல்விகள், பின்னர் கூட்டணியில் சேர்ந்தபின் கிடைத்த வெற்றிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் தான் எவ்வாறு அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்பதை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    இருப்பினும், விஜய்க்கு சில தயக்கங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது முதல் மாநில மாநாட்டிலேயே “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக” என்று அவர் அறிவித்திருந்தார். மேலும், பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்று பல மேடைகளில் அவர் பேசியிருந்தார். அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவது குறித்து அவருக்குள் ஒரு நெருடல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் சில தொண்டர்கள் மத்தியில் கூட்டணிக்கான ஆதரவு என்றும் பேசப்படுகிறது. கூட்டணியில் அரசியல் பலம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலையைப் பார்த்தால், திமுகவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சி அதிமுகதான். வலுவான வாக்கு வங்கி, கிராமப்புறங்களில் பரந்த அமைப்பு, மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து உருவான பாரம்பரிய ஆதரவு ஆகிய காரணங்களால் அதிமுக இன்னும் வலுவான கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டியே தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் களமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகை ஒரு புதிய காரணியாக பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் போன்றோரிடையே அவருக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. பல கருத்துக்கணிப்புகளிலும் அவர் இரட்டை இலக்க வாக்குகளைப் பெறக்கூடும் என்ற மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.

    இந்த வாக்குகள் தனியாகப் பிரிந்தால் அது பல இடங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்ற கணிப்பு உள்ளது. கடந்த தேர்தலில் சில கட்சிகள் செய்ததைப் போல இந்த முறை விஜயின் கட்சியும் வாக்குகளை பிரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால், அந்த வாக்குகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று பாஜக கணக்கிடுகிறது பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

    2021 தேர்தலை எடுத்துக்கொண்டால், அப்போது டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. ஆனால் அதிமுக அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததை அடுத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த முறை கூட்டணி அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

    கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக சமூக ஊடகங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதுபற்றி செய்தியாளர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

    பாஜக மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, ​​“எனக்கு இதுபற்றி எந்த தகவலும் இல்லை” என்று கூறியுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன் “இது குறித்து இறுதி முடிவு டெல்லி தலைமையில்தான் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சித் தலைவர் ஜி.கே. வாசனும் இதுபற்றி தெளிவான பதில் அளிக்காமல், “எங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை; டெல்லி தலைமையே முடிவு செய்யும்” என்றேன் கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதற்கிடையில், விஜயைச் சுற்றியும் சில அரசியல் நிகழ்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. சமீபத்தில் அவருக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டதாகவும், கரூர் தொடர்பான வழக்கில் டெல்லியில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது வெளியாகியுள்ளன. ஆனால் முன்கூட்டியே கட்சித் திட்டங்கள் இருப்பதால் அந்தத் தேதியில் ஆஜராக முடியாது என்று விஜய் தரப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வேறு தேதியை வழங்க வேண்டும் என்றும், சென்னை அலுவலகத்தில் விசாரணை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர் தகவல்கள் கூறுகின்றன.

    மேலும், விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்தின் தனிக்கை தொடர்பான விவகாரமும் பேசப்படுகிறது. மறுஆய்வுக்காக படம் வரவிருந்த நிலையில், குழுவில் உள்ள ஒரு உறுப்பினரின் உடல்நிலை காரணமாக அந்த ஆய்வு நடைபெறவில்லை. இந்த விவகாரங்கள் அனைத்தும் இணைந்து அரசியல் அழுத்தமாக பயன்படுத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. திரைப்பட வெளியீடு, வழக்கு விசாரணை போன்ற அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஒரு காரணியாக மாறுமா என்ற சந்தேகங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

    அமித்ஷா அரசியல் வியூகங்களில் திறமையானவர் என பொதுவாகக் கூறப்படுவதால், அவர் எந்த வகையான முயற்சிகளை மேற்கொள்வார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 40 சீட்டுகளை ஒதுக்குவதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகவும் அமித் ஷா தரப்பில் வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் விஜய் தனித்து போட்டியிடவே விரும்புவதாக கூறப்படுகிறது. முதல் தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரூபிக்கும் விதமாக விஜய் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிபிஐ விசாரணை, ஜனநாயகன் தடை என பல்வேறு அழுத்தங்களை பாஜக அவர் மீது திணித்து வருவதாக சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. விஜய் இந்த அழுத்தங்களுக்கு இணைவாரா அல்லது தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்துவாரா என்பதே இப்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.

    இதனிடையே, தமிழகத்தில் எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு, தவெகவின் இளைஞர் ஆதரவை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அது வாக்கு கணக்கில் பலம் தரும் என்ற மதிப்பீடு பாஜக வட்டாரங்களில் இருப்பதாக பேசப்படுகிறது. இதனால் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் தமிழக அரசியலில் பாரம்பரியம் மிக்க அதிமுகவுக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாஜக தலைமை முக்கியத்துவம் தருவது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெக வருவதை இபிஎஸ் விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. பாஜகவிற்கே எடப்பாடி பழனிசாமி 25 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்ற மனநிலையில் உள்ளார். ஆனால் தவெகவிற்கு 40 சீட் ஒதுக்கிறோம் என பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதும், குறிப்பாக துணை முதலமைச்சர் பதவியை தூக்கிக் கொடுக்க திட்டமிடுவதும் எடப்பாடி பழனிசாமியை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.  
     

    இதையும் படிங்க: NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்..?? மீண்டும் தீயாய் பரவும் செய்தி..!! அரசியலில் அடுத்த ட்விஸ்ட்..!!

    மேலும் படிங்க
    பெயரில் கூட விஜயை சேர்க்காத ஜேசன் சஞ்சய்..! பட கையெழுத்தில்.. இனிஷியலால் வெளிவந்த உண்மை?

    பெயரில் கூட விஜயை சேர்க்காத ஜேசன் சஞ்சய்..! பட கையெழுத்தில்.. இனிஷியலால் வெளிவந்த உண்மை?

    சினிமா
    கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!

    கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    அப்பா அரசியலில்.. மகன் மக்களோடு..! விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் செயல் வைரல்..!

    அப்பா அரசியலில்.. மகன் மக்களோடு..! விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் செயல் வைரல்..!

    சினிமா
    முத்துவுக்கு அடித்தது ஜாக்பாட்..! செம கடுப்பில் ரோகிணி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    முத்துவுக்கு அடித்தது ஜாக்பாட்..! செம கடுப்பில் ரோகிணி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!!  ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

    பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூவி, கூவி டோக்கன் கொடுத்த தவெக நிர்வாகிகள்... கடைசியில் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூவி, கூவி டோக்கன் கொடுத்த தவெக நிர்வாகிகள்... கடைசியில் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!

    கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!!  ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

    பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூவி, கூவி டோக்கன் கொடுத்த தவெக நிர்வாகிகள்... கடைசியில் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூவி, கூவி டோக்கன் கொடுத்த தவெக நிர்வாகிகள்... கடைசியில் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

    தமிழ்நாடு
    அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

    அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி சம்பவம்..!! MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... தீவிர விசாரணை..!!

    அதிர்ச்சி சம்பவம்..!! MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!

    மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share