• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நள்ளிரவு 2 மணி.. தீக்காயத்துடன் கதவை தட்டிய அர்ஜுன்..! கத்தி கூச்சலிட்டபடி கதறி அழுத ஐஸ்வர்யா அர்ஜுன்..!

    ஐஸ்வர்யா அர்ஜுன், தனது தந்தைக்கு நடந்த விபத்து குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Thu, 12 Feb 2026 12:27:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-its-still-hard-to-think-about-it-now-aishwarya-arjun-spoke-through-tears-tamilcinema

    தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தன்னுடைய தனித்துவமான அடையாளத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். 1990-களில் தொடங்கி இன்று வரை அதிரடி, தேசபக்தி, சமூக கருத்துக்கள் மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் திரைத்துறையில் தடம் பதித்தவர்.

    அர்ஜுன் என்ற பெயர் கேட்டாலே அதிரடி காட்சிகள், தேசிய உணர்வு, வலுவான வசனங்கள் என்ற நினைவுகள் ரசிகர்களின் மனதில் உடனே தோன்றும். ‘சேவகன்’, ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’, ‘சொல்லிவிடவா’ போன்ற பல படங்களை இயக்கி தனது கதை சொல்லும் திறமையையும் நிரூபித்துள்ளார். குறிப்பாக ‘ஜெய் ஹிந்த்’ போன்ற படங்கள் தேசபக்தி உணர்வை வலியுறுத்திய படங்களாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில், 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களம் இறங்கியுள்ளார் அர்ஜுன். அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘சீதா பயணம்’. இந்த படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. குடும்ப உணர்வுகளும், பயணத்தின் பின்னணியிலும் உருவாகியுள்ள இந்த படம், வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: என் சந்தோஷத்துக்கு காரணமே ரவிமோகன் தான்..! தனது பதிவால் ஆர்த்தியை கடுப்பேற்றிய கெனிஷா..!

    aishwarya-arjun

    ‘சீதா பயணம்’ திரைப்படத்தில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மூத்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். இவர்களின் அனுபவமும், நடிப்புத் திறனும் படத்திற்கு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. பன்மொழி வெளியீடு என்பதால், படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெறும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘சீதா பயணம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தனது தந்தை குறித்து உருக்கமாக பேசியது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. மேடையில் பேசும் போது பல இடங்களில் கண்ணீர் துடைத்தபடி அவர் பகிர்ந்த அனுபவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் பேசுகையில், “படப்பிடிப்பில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

    எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறோம். இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும். அப்பா எப்போதுமே எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்காக மெனக்கெடுவார், கடுமையாக உழைப்பார்,” என்று ஆரம்பித்தார். மேலும் அவர் பகிர்ந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. “முதல்வன் படப்பிடிப்பின் போது, ஒரு நாள் நள்ளிரவு 2 மணிக்கு அப்பா வீட்டுக்கு வந்தார். அவர் கழுத்து முழுவதும் எரிந்து போய் இருந்தது. அதை பார்த்து நாங்கள் எல்லாரும் பயந்துவிட்டோம். அந்த படத்தில் வில்லன் வீட்டை வெடிகுண்டு வைத்து எரிக்கும் ஒரு காட்சி இருக்கும்.

    aishwarya-arjun

    அந்த சீனில் அப்பா விபத்தில் சிக்கி கழுத்து எரிஞ்சி போச்சு. அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு,” என்று கண்ணீருடன் கூறினார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முழு ஈடுபாட்டுடன் உழைக்கும் அர்ஜுனின் அர்ப்பணிப்பு இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சிக்காக கூட உயிர் பணயம் வைத்து நடிப்பது போன்ற அர்ப்பணிப்பு தான் அவரை ‘ஆக்ஷன் கிங்’ என்ற பெயருக்கு தகுதியானவராக மாற்றியுள்ளது.

    திரைத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட அர்ஜுன், இன்றும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உடல்நலத்தையும், வயதையும் பொருட்படுத்தாமல், கதைக்கு தேவையான அளவு உழைப்பது அவரது தனிச்சிறப்பு. இதனை அவரது மகள் மேடையில் பகிர்ந்த விதம், ஒரு நடிகரின் மறுபக்கம் — குடும்பம் காணும் அர்ப்பணிப்பு — என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

    ‘சீதா பயணம்’ திரைப்படம் அர்ஜுனுக்கு இயக்குநராக மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனின் இந்த உருக்கமான பேச்சு, படம் குறித்து ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பை ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது.

    aishwarya-arjun

    மொத்தத்தில், அர்ஜுனின் அர்ப்பணிப்பும், குடும்பத்தின் ஆதரவும் இணைந்து உருவான ‘சீதா பயணம்’ படம், வரும் 14-ஆம் தேதி வெளியாகும் நிலையில், அது பாக்ஸ் ஆபிஸில் எவ்வாறு சாதிக்கும் என்பது திரையுலகில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தந்தையின் கடின உழைப்பை மகள் கண்ணீருடன் நினைவுகூர்ந்த அந்த தருணம், இந்த படத்திற்கு முன்பே ஒரு உணர்ச்சி வெற்றியை பெற்றுத்தந்துவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

    இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கதை தான் 'Dude'..! நடிகர் பார்த்திபன் ஷாக்கிங் ஸ்பீச்..!

    மேலும் படிங்க
    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    அரசியல்
    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    பங்குச் சந்தை
    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    இந்தியா
    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    அரசியல்
    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    இந்தியா
    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    அரசியல்
    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    இந்தியா
    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    அரசியல்
    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    இந்தியா
    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு
    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share