18 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஒல்லியாகவே இருக்கும் அழகிய நடிகை என்றால் அவர் நடிகை வேதிகா தான். இவரது நடிப்பில் வந்த படங்களை விட இவர் கூறிய ஒரு டையலாக்கும் ஒரு பாடலுக்கு ஆடிய நடனமும் இன்று வரை மிகவும் ஃபேமஸ். அவை என்னவெனில் "ரொம்ப மோசமான உருவம்டா சாமி" என கூறி லாரன்ஸிடம் அடிவாங்கியதும், "குட்டி பிசாசே" என்ற பாடலில் மிகவும் அழகாக சிம்புவுக்கு இணையாக ஆடி அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவையுமே.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் வேதிகா தமிழ் திரையுலகில் 2006ம் ஆண்டு வெளியான "மதராசி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இன்ஸ்பிரேடு மூவிஸ் & ஸ்பைஸ் டீம் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிபில் அர்ஜுன் இயக்கி நடித்த இப்படத்தில், ஜெகபதி பாபு, காஜலா ஆகியோருடன் வேதிகா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் "சிவகாசி" என மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஏன்னு தெரியல.. இவங்க இரண்டு பேரையும் காதலிக்கிறேன்..! நடிகை வேதிகா ஓபன் டாக்..!

இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக, அதன் பின் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, தருண் கோபி இயக்கத்தில் காளை, கலாபிரபு இயக்கத்தில் சக்கரகட்டி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் மலை மலை, இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி, வசந்தபாலன் இயக்கத்தில் காவிய தலைவன், மீண்டும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3, எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பேட்ட ராப், விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் விநோதன் போன்ற படங்களில் இயக்குனர்கள் இவரை நடிக்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ்சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் தான் 'கஜானா'. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா, சாந்தினி, யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே மாதம் ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.

இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய வேதிகா, கஜானா படத்தின் ஒன்லைனை குறித்து டிரைக்டர் சொல்லும் போதே, எனக்கு ஆர்வமாக இருந்தது. அதைவிட ஆடியன்ஸ்ஸினுடைய பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்த கதையை பார்த்த பின்பு தான் இப்படத்தின் மீது எனக்கு நம்பிக்கையே வந்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் இதுவரை வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக நடித்திருந்தாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை மக்களோடு மக்களாக இருந்து பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

இந்த படம் கண்டிப்பாக சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இந்த கோடை காலத்தில் குழந்தைகளை மகிழ்விக்கப்போகும் ஒரு படத்தில் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் தான் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் உள்ளார். பொதுவாக ஒரு படத்தில் இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இவ்வளவு வேலைகளின் மத்தியிலும் படத்தை மிக சிறப்பாக எடுத்திருக்கிறார்" என கூறினார்.
இதையும் படிங்க: துணைவியாரை இழந்த சோகத்தில் கவுண்டமணி..! தகனம் செய்யப்பட்ட மனைவியின் உடல்..!