தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மனதில் உற்சாக நாயகனாக இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். இவர் பார்க்க அழகாகவும் கலராகவும் இருப்பதினால் நடிக்க மட்டும் தான் செய்வார் என நினைத்தால் அதுதான் தவறு. அவர் ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த அஜித் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார்.

இப்படிப்பட்டவர், இதுவரைக்கும் தமிழில் மட்டுமே படங்களை நடித்து உள்ளார். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிசார்ந்த ரசிகர்களுக்காக இவரது படம் டப்பிங்கில் இன்றுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வளர்ந்த நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: தன்னை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன்.. தரமான பதில் கொடுத்த நடிகர் நானி...!

இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர்.

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்த சூழலில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் தோல்வியடைந்தாலும் அதனை பேலன்ஸ் செய்யும் வகையில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் ஃபேன்பேஸ் மூவி என்ற கான்சப்ட்டை வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் கார் ரேஸ்களில் கலந்து வெற்றி பெற்ற அஜித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் "பத்ம பூஷன்" விருது கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில், கார் ரேஸ்களில் கலந்து கொள்ளும் பொழுது படங்களில் நடிக்க போவதில்லை எனவும் அதேசமயம் படங்களில் நடிக்கும் பொழுது ரேஸ்களில் கலந்துகொள்ள போவதில்லை எனவும் தெரிவித்திருந்த படியால் ரசிகர்கள் அஜித்தின் அடுத்தப்பட அப்டேட்டுக்காக காத்திருந்தனர்.

இப்படி பட்ட வேளையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க இருக்கிறார். இப்படத்திலும் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருப்பதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாதாகவும், முதல் முறையாக அவருடன் பூஜா ஹெக்டேவும் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இதுகுறித்ததான அதிகார பூர்வ தகவல் வெளிவராததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!