இளையராஜாவை குறித்து யார் அவதூறாக பேசினாலும் அங்கு நேரடியாக சென்று பதிலடி கொடுப்பவர் தான் கங்கை அமரன். பாசமிகு அண்ணனுக்கு கிடைத்த பாசமிகு தம்பியாக வலம் வரும் கங்கை அமரன் தமிழ் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி தனது பன்முகத் திறமை காட்டியவர்.

இப்படிப்பட்ட கங்கை அமரனுக்கு கண்ணாதாசனுக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என ஆசை, ஆனால் அந்த ஆசை அவருக்கு நிராசையாக மாறியது. பின்பு கதை ஆசிரியரும், பாடலாசிரியருமான பஞ்ச அருணாச்சலத்திடம் உதவியாளராக சேர்ந்து திறம்பட தொழிலை கற்று கொண்ட கங்கை அமரன், கரகாட்டக்காரன் மற்றும் கோழிகூவுது உள்ளிட்ட படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தனது அண்ணனான இளையராஜாவுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசையமைத்துள்ள உள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!

இப்படி பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரனுக்கு, அவரது திறமையில் சற்றும் குறையாத இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த சென்னை 26, பிரியாணி, மங்காத்தா, தி கோட் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஃபேமஸ். அதேபோல் பிரேம்ஜியும் நடிகர், பாடகர், இசை இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

இந்த சூழலில், இளையராஜா அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் வந்த தனது பாடலுக்கு காப்புரிமை கேட்டு நோட்டிஸ் அனுப்ப, அவரை அனைவரும் வசைபாடி தீர்த்தனர். இதனை பார்த்து தாங்கமுடியாத கங்கை அமரன். இந்த படத்தில் நீங்களே ஒரு இசையமைப்பாளருக்கு ரூ.7 கோடி கொடுத்து இசையமைக்கும் பொழுது எங்களுடைய பாடலை ஏன் எடுக்க வேண்டும்.
எங்களுடைய பாடலை வைத்து எதற்கு உங்கள் படங்களை ஹிட் ஆக்க வேண்டும். நீங்கள் முறைப்படி வந்து இந்த பாடலை பயன்படுத்தி கொள்கிறேன் என இளையராஜாவிடம் கேட்டு இருந்தால் அவரே கொடுத்திருப்பார் கேட்காமல் பாடலை பயன்படுத்தியது தவறுதான் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அவரது மகன் பிரேம்ஜி, கங்கை அமரன் அவரது அண்ணனுக்காக பேசும்பொழுது நானும் எனது அண்ணனுக்காக பேசுவேன் அல்லவா... குட் பேட் அக்லி படம் உண்மையில் இளையராஜா பாடலால் ஹிட் ஆகவில்லை அது அண்ணனின் நடிப்பால் ஹிட் ஆனது என பேசியிருந்தார். இந்த நிலையில் கங்கை அமரன் 'குற்றம் தவிர்' என்ற படத்தின் விழாவில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், பேசிய கங்கை அமரன், "நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் குறை சொல்லாமல் இதுவரை சென்றதில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் விளம்பரத்தில் இசை ஸ்ரீகாந்த் தேவா என்று போடவில்லை அது ஏன் என எனக்கு தெரியவில்லை. இசையமைப்பாளர்களாகிய நாங்கள் எங்களுடைய மரியாதையை எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இயக்குநர்கள் பேரரசு, ராஜகுமாரன் அரவிந்த்ராஜா போன்றோரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் கோழி கூவுது, கரகாட்டக்காரன் படங்களை அப்போது இயக்கினேன். ஆனால் இப்போது பாருங்க சும்மா தான் இருக்கிறேன். ஏனெனில் என்னுடைய இரண்டு மகன்களிடமும் பொறுப்பை கொடுத்துவிட்டேன். அடுத்த தலைமுறையிடம் சினிமாவை முழுவதுமாக ஒப்படைத்து விட்டதால் அவர்கள் சுதந்திரமாக வேலை செய்து வருவதை பார்க்க முடிகிறது. என்னுடைய மகன்கள் எடுக்கும் படங்களும் நடிக்கும் படங்களும் நன்றாகவே இருக்கிறது.

இந்த மாதிரி விழாக்களில் படத்தில் இடம்பெற்றிருக்கும் சுவாரசியமான இரண்டு சீன்களை ஒளிபரப்பலாம். மேலும் இப்படத்தின் ஹீரோ, ஹீரொயினும் நன்றாக இருக்கிறார்கள். ஆக குற்றம் தவிர் படம் வெளியாகும்போது கண்டிப்பாக ஸ்ரீகாந்த் தேவா இன்னொரு உயரத்தை தொடுவார். " என்றார்.
இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வருவது உண்மைதான்..! லதா ரஜினிகாந்த் பகீர் பேட்டி..!