சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இல்லையென்றால் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடல் வந்திருக்குமா? அந்த அளவிற்கு நடிகர் ரஜினியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ரஜினிகாந்த் 80களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஒரு ஸ்டைலும், 90களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஒரு ஸ்டைலும், 2கேக்களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஸ்டைலிலும் நடித்து இன்று பலகோடி ரசிகர்களை தன் கைவசம் வைத்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இப்படி பட்ட சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணங்களை சற்று திரும்பி பார்த்தால் 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.
இதையும் படிங்க: மீண்டும் அரசியலில் ரஜினிகாந்த்..? முக்கிய Ex.அமைச்சருடனான சந்திப்பால் ஆட்டம் கண்ட அரசியல் களம்..!

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார்.

இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு இயக்குனர்கள் இரண்டு படத்தை இயக்கி வருகின்றனர். ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. அதனை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதில் தற்பொழுது ரஜினி நடித்து வருகிறார். இந்த சூழலில், ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடித்த பின் சென்னை வந்த ரஜினிகாந்த் முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசியிருந்தார்.

இதனை பார்த்த பலரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர ஓய்வில் இருக்கவுள்ளதாகவும், சிறிது நாட்கள் கழித்து விஜய்க்கு போட்டியாக அரசியலில் நுழைய இருப்பதாகவும் பேசி வருகின்றனர். இதனை குறித்து ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்திடம் கேட்கையில் அவர் "இதற்கு பதில் அவர் தான் கூற வேண்டும் நான் எப்படி சொல்ல முடியும். இப்பொழுது இந்த நிமிடம் அவர் நடிகர் தான். ஆக படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்" என கூறி சென்றார்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!