ஷாருக்கான் சல்மான் கான் வரிசையில் அடுத்ததாக இருப்பவர் என்றும் அமீர்கான் தான். இவரது நடிப்பில் பல படங்கள் வந்தாலும் குஸ்தி படமான 'டாங்கள்' படத்தை யாராலும் மறக்க முடியாது. இப்படிப்பட்ட அமீர் கான், ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகராக தோன்றி அதன் பின் திரைப்பட தயாரிப்பாளர் என்ற அங்கிகாரத்துடன் வாழ்ந்து வருபவர்.

இவர் 1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும்.
இதையும் படிங்க: சீனா, அமெரிக்காவிடம் இந்தியா கற்று கொள்ள வேண்டும்..! அமீர்கான் பரபரப்பு பேச்சு..!

அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது. இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன.

இப்படி இருக்க, 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் படமாக தற்பொழுது அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.எஸ் பிரசன்னா, முழுக்க முழுக்க நடிகர் அமீர் கானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா முன்னணி கதாபார்த்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பலரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள இப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் அமீர் கான் தனது 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை எந்த ஓடிடி தளங்களுக்கும் விற்க மாட்டேன் என தீர்க்கமாக தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் வெளியான பின்பு சுமார் இரண்டு மாதங்கள் கழித்து, யூடியூபில் "பே-பெர்-வியூ" என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இப்படி செய்வது டிஜிட்டல் முறையில் புதிய வழிவகையை ஏற்படுத்தும் எனவும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஓடிடி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருவதுடன் இதற்குண்டான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!