தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் வெளியான படங்களிலும், ஓடிடி தளங்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்லைன் வலைத் தொடர்களின் மூலம் தற்போது ஃபேமஸாக இருக்கும் இந்திய நடிகை தான் குஷி முகர்ஜீ. இவர் என்றென்றும் தன்னுடைய திறமை, நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியான தோற்றத்தால், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். 2013ம் ஆண்டு தமிழ் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன்பின் ஹிந்தியில், ஸ்ரீங்கார் என்ற படத்திலும், ஹார்ட் அட்டாக், மற்றும் டோங்கா பிரேமா என்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பல டீவி நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி தொடர்களிலும் தவறாமல் இவர் இருப்பார். மேலும் யோகா, ஜிம், பயிற்சி, நாய்க்கு உணவளித்தல், உணவுப் பகிர்வது என பல சமூக நலப்பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருபவர். இப்படி பட்டவர், பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக் குயிலாக தற்போது அடிக்கடி சினிமா செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் நடிகை குஷி முகர்ஜி. சமீப நாட்களில், நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்கள் என்று எங்கு சென்றாலும், அவர் அணிந்திருக்கும் கவர்ச்சியான உடைகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன் பெரிய விவாதத்துக்கும் காரணமாக இருக்கிறது. கண்ணாடி இழை போலவே ஓரளவிற்கு தெரியக்கூடிய மெஷ் வடிவ உடைகளை அணிந்து குஷி முகர்ஜி எங்கு சென்றாலும் கேமராக்கள் அவரை படம் பிடிக்க ஆர்வம் காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் குறிப்பாக குழந்தைகளும் குடும்பத்தினரும் இருக்கும் இடங்களில் கூட அவர் அணிந்து வரும் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை பார்த்த, பலரிடையே கோபத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் சமூக வலைதளங்களில் "இது ஃபேஷனா, என்ற கேள்வியும், சினிமாவில் வாய்ப்பு இல்லையெனில் இதுதான் தீர்வு?, கலை சுதந்திரம் என்ற பெயரில் எல்லையை கடக்கலாமா?" என பலரும் தங்களது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'வார்-2' பட ஹீரோயினுக்கு தேவதை பிறந்துள்ளாராம்..! கொண்டாட்டத்தில் பாலிவுட் ரசிகர்கள்..!
ஆனால், இந்த விமர்சனங்கள் அனைத்தையும் ஒரு புறம் தள்ளி வைப்பது போலவே, குஷி முகர்ஜி தனது ஆடை சுதந்திரத்தில் உறுதியாகவே இருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. காரணம் சமீபத்தில், ஒரு தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " விமர்சனங்கள் என்னை ஒருநாளும் பாதிக்கவே இல்லை. என் உடலை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என் சுதந்திரத்தில் தயவு செய்து தலையிடாதீர்கள். நான் யாருக்காகவும் ஆடை அணியவில்லை என் விருப்பத்திற்கு ஆடை அணிகிறேன், யார் சொன்னாலும் 'அடங்க' மாட்டேன். ஏனெனில் நான் எதற்கும் அடங்காதவள்" என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கண்டனமும், விமர்சனங்களும், ஒருபுறம் வந்தாலும் மருபுறம் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவும் பெருகியுள்ளது. அதன்படி சிலர், "பெண்கள் விருப்பப்படி உடை அணியட்டுமே அது தானே உண்மையான உடல் சுதந்திரம்” என ஒருசிலர் அவரது பக்கம் நிற்கிறார்கள். இன்னொருபுறம், “சுதந்திரம் என்பது சமூகத்தின் நெறிமுறைகளை முற்றிலுமாக புறக்கணிக்க அனுமதிக்காது” என வேறு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குஷி முகர்ஜி இன்னும் எந்த அளவிற்கு சர்ச்சையை தாண்டிக் கவர்ச்சி காட்டப் போகிறார் என்பதுதான் ரசிகர்களிடையே வரும் கேள்வியாக உள்ளது. பாலிவுட் நடிகைகளில், கவர்ச்சியின் உச்சம் பலருக்கும் வேதனை அளித்து வருகிறது.
இதையும் படிங்க: பிரபல கொரியன் நடிகை காங்க் சே ஹா திடீர் மரணம்..! இணையத்தை சோகக்கடலில் மூழ்கடித்த ரசிகர்கள்..!