பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரத் தம்பதியாக அனைவராலும் விரும்பப்பட்டு வரும் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதற்கு முன்பு இவர்கள் யார் என பார்க்கலாம். கியாரா மற்றும் சித்தார்த் இருவரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். "ஷேர்ஷா" திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு பின் நாட்களில் காதலாக மாற, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில், ராஜஸ்தானில் உள்ள ஜைசல்மேரில், உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகும் இருவரும் தங்கள் திரையுலக பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து நகர்ந்து வருகின்றனர். மேலும், கியாரா அத்வானி தற்போது ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடித்திருக்கும் "வார் 2" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இப்படம், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஸ்பை யூனிவர்ஸில் அடுத்த பிரமாண்ட அத்தியாயமாகும். மறுபுறம், சித்தார்த் மல்ஹோத்ரா, இளம் நடிகை ஜான்வி கபூர் உடன் இணைந்து நடித்துள்ள "பரம சுந்தரி" என்ற திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

காதல், இசை மற்றும் குடும்பக் கதை பின்னணியிலான இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக இணையத்தளங்களை சில நாட்களாக தனது கையில் வைத்திருக்கும் அளவுக்கு வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போட்டோஷுட்களால் மக்களை தொடர்ந்து ஆர்வத்தில் வைத்திருந்த இந்த தம்பதியின் வாழ்க்கையில் இறுதியாக பெண் தேவதை குழந்தையாக பிறந்து இருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவலாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: பிரபல கொரியன் நடிகை காங்க் சே ஹா திடீர் மரணம்..! இணையத்தை சோகக்கடலில் மூழ்கடித்த ரசிகர்கள்..!
பிரபல பாலிவுட் வட்டார தகவல்களின் பேரில், மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில், இன்று காலை இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், தாயுமான கியாரா அத்வானியும் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்பார்ப்பு என்னவென்றால், விரைவில் சமூக வலைதளங்களில் இவர்கள் பிறந்த குழந்தையைப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்வார்கள் என்பது தான்.

இவர்களுக்கு குழந்தை பிறந்த செய்தி வெளியானதால், பாலிவுட் நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ரசிகர்கள் இந்த தம்பதியின் சிறு குழந்தையை எப்போது பார்ப்போம் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தேசிய விருது பெறுவதற்கு முன் கையில் மாட்டு சாணம் வைத்திருந்தேன்..! நடிகை நித்யா மேனன் பேச்சால் பரபரப்பு..!