தமிழ் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவரும் தற்பொழுது ஆங்கிலமொழி படங்களை விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் விளையாட்டு சார்ந்த படங்களை பார்க்கும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால் பல விளையாட்டு சார்ந்த படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட், ஹாக்கி, ரன்னிங், ஜம்பிங், கார் ரேஸ், பைக் ரேஸ், ஃபுட் பால், வாலி பால், ஸ்விம்மிங் என பல விளையாட்டுகள் சார்ந்த படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்து வருகின்றன. மறுபக்கம் ஹாலிவுட்டில் அவெஞ்ச்சர்ஸ், ஃபைரேட்ஸ் ஆஃப் தி கெரேபியன், கார்டியன் ஆஃப் தி கேலக்சி, ஐயன் மேன், ஆண்ட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் என பல படங்கள் வந்து மக்களை ரசிக்க வைத்து வருகினறன.

இப்படி இருக்க, ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரிசையில் எப்பொழுதும் முதல் இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்திருப்பது தான் கொரியன் படங்கள் மற்றும் சீரிஸ்கள், அருமையான கதை களம், அற்புதமான காட்சி வடிவமைப்பு, காதல், காமம், கோபம், வன்மம், இரக்கம், மரியாதை என அனைத்தையும் ஒரு படத்தில் வைத்து கலவையாக கொடுப்பதில் என்றும் கொரியன் படங்கள் ஃபேமஸ். ஆதலால் தான் அவர்களது இசை கச்சேரி முதல் சீரியல்கள் வரை நாடுகள் கடந்து மக்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் அனைவரையும் பார்க்க வைத்த படம் தான் கொரியன் சிரிஸ்ஸான "ஸ்குவிட் கேம்" .
இதையும் படிங்க: அப்போ த்ரிஷா... இப்போ...? கொடைக்கானலுக்கு விஜயுடன் விமானத்தில் சென்ற அந்த பெண் யார்..?

கொரியன் மொழியில் தயாரான இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டுள்ளது. விளையாட்டு மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான இந்த தொடர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு , அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே "ஸ்குவிட் கேம் சீசன் 2" டிசம்பர் 26-ம் தேதி 'நெட்ஃபிலிக்ஸில்' வெளியான நிலையில், இதன் அடுத்த சீசனுக்கான அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற ஜீன் மாதம் 27ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ள "ஸ்குவிட் கேம் சீசன் 3"க்கான டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: நடிகை திரிஷாவின் 42வது பர்த்டே.. இப்படி ஒரு கொண்டாட்டமா..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!