தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நடிகை தேவயானியின் 'நிழற்குடை' படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ், தேவயானி எப்பொழுது பார்த்தாலும் முகத்தில் அந்த அன்பை மட்டுமே வைத்துள்ளார். அது எப்படி என எனக்கும் புரியவில்லை, உண்மையிலேயே அவரது கணவர் கொடுத்து வைத்தவர் தான் இப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்க. அதுமட்டுமல்லாமல் தேவையானி நடித்துள்ள இந்த நிழற்குடை படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என நம்புகிறேன் என பேசி சென்றார்.

அவரை தொடர்ந்து பேசிய தேவயானி, "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் எனது கணவரை காமெடி நடிகர் சந்தானம் மிகவும் மோசமாக கலாய்த்து இருப்பார். உண்மையில் சந்தானம் என் கணவரை கலாய்த்து இருந்ததை இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை.
என் மனதில் நீங்காத கேள்வி என்றால் எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று தான் எனக்கு இன்று வரை தெரியவில்லை. குறிப்பாக சந்தானம் படத்தில் என் கணவர் நடிக்கிறார் என்று படம் வெளியான பின்புதான் எனக்கு தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது" என காட்டமாக பேசியிருந்தார். இது இனையத்தில் ட்ரெண்டாக இந்த கேள்வி நடிகர் சந்தானத்திடம் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!

அதற்கு பதிலளித்த நடிகர் சந்தானம், "நாங்கள் ஒரு காமெடியை படமாக எடுக்கும் முன்பே சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஸ்கிரிப்டை கொடுத்து அனைத்தையும் சொல்லி விடுவோம். அதே போல் தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நாங்கள் தேவயானி கணவரான ராஜ்குமார் சாரிடம் பேசும்பொழுதே, 'இந்த கேரக்டர் பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் ஆதலால் இந்த கேரக்டர் வயதுக்கு மீறின ஒன்று செய்யும். ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து உங்களை பயங்கரமாக கலாய்ப்போம்' என்று அவரிடம் முன்பாகவே சொன்னோம். அவரும் படத்தின் வசனங்கள், கதை என அனைத்தையும் படித்துவிட்டு அதன் பின் சிரித்த படி ஓகே, பண்ணலாம் வாங்க என சொன்னார். அந்த சீனில் உண்மையாகவே முதலில் அவர் தான் என்னை பயங்கரமாக கலாய்த்துக்கொண்டே இருப்பார்.

அதுமட்டுமல்லாமல், எங்களுடன் நடிக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் சரி, முதலில் நாங்கள் ஸ்க்ரிப்ட், வசனம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இப்படியெல்லாம் இருக்கும் உங்களுக்கு ஓகே-வா என கேட்டுவிட்டுத்தான் நடிக்கவே ஆரம்பிப்போம். இது காமெடி அதனை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணத்திற்கு, நான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கலர் கலராக ட்ரெஸ் போட்டு நடித்திருப்பேன்.
அதை பார்த்து என் வீட்டில் உள்ளவர்கள் கூட என்ன டா இது, இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்ன? என்று என்னிடம் சிரித்தபடி கேட்டார்கள். நடிப்பு என்பது ஒரு கேரக்டர் தான். அது என்ன செய்யுமோ அதைத்தானே நாங்களும் செய்ய முடியும். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் சார் கூட தன்னை ஒரு குள்ளமான மனிதனாகவே காண்பித்திருப்பார், இல்லையெனில் அந்த கேரக்டருக்கு மதிப்பேது" என்றார்.
இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பாஜக டார்கெட்டில் சந்தானம்.. சிக்கியது டிடி நெஸ்ட் லெவல்..!