தனியார் தொலைக்காட்சியின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்க போவது யார்’ மற்றும் அசத்த போவது யார் மூலம் ரசிகர்களின் இதயத்தை வென்ற மதுரை முத்து, தீபாவளியை முன்னிட்டு ஒரு மனிதநேயச் செயலால் மீண்டும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். என்னவெனில் தனது வீட்டருகில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு சேலைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்த அவர், “தீபாவளி நம்முடையது மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள எல்லாருடையது” என்ற மனப்பாங்குடன் இந்த சிறப்பான செயலை மேற்கொண்டுள்ளார்.
தீபாவளி நெருங்கும் வேளையில், பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பண்டிகையைத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, அந்த மகிழ்ச்சியை தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்துள்ளார். இதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை முத்து, “வழக்கம் போல தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்க. ஆனால் முடிந்த அளவுக்கு அக்கம் பக்கத்தவர்களையும் மகிழ்ச்சியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையான பண்டிகை” என்றார். மேலும் முத்து தனது வீட்டருகில் வசிக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சேலைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கினார். அவரின் செயலைக் கண்ட மக்கள் பெருமையாகவும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டினர்.
பட்டாசுகளை வாங்கி மகிழ்ந்த சிறுவர்கள், “முத்து அண்ணா நம்மை என்றும் மறக்க மாட்டார்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். மதுரை முத்து, ‘KPY’ நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்தவர். ஆனால் மேடைக்கு வெளியே அவர் ஒரு உணர்வுபூர்வமான மனிதராக திகழ்கிறார். தீபாவளிக்கு முன்பாக அவர் செய்த இந்த செயல், அவரது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துகிறது. அவர் மேலும் பேசுகையில், “நம்ம ஊரிலேயே நிறைய சிறு தொழிலாளிகள் இருக்காங்க. அவங்க கடையிலிருந்தே பொருட்களை வாங்குங்க. அவங்களும் இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும்” என்றனர். அண்மைக்காலத்தில் பெரிய மார்க்கெட்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால், சிறு வணிகர்கள் நெருக்கடியில் இருக்கின்றனர். முத்துவின் வேண்டுகோள், “சிறு குறு கடைகள் வாழட்டும்” என்ற சமூகச் செய்தியையும் எடுத்துக்காட்டுகிறது. பலரும் இதை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பைசன்' படத்தை பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..! திடீரென சொன்ன அந்த வார்த்தை.. ஷாக்கில் ரசிகர்கள்..!

முத்துவின் அன்பளிப்புகளை பெற்ற அக்கம் பக்கத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு பெண், “முத்து அண்ணா எப்போதும் நம்ம ஊரு மக்களோட கலந்தே இருப்பார். இப்போ தீபாவளிக்கு சேலை, இனிப்பு கொடுத்தார். நாங்களும் குடும்பமாக கொண்டாடப் போறோம்” என்றார். மற்றொருவர், “பட்டாசு வாங்கி கொடுக்கிறார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் மாதிரி நபர்கள் இருந்தா, ஊர் ஒற்றுமையோட இருக்கும்” என்றார். முத்துவின் தீபாவளி செயல்பாடு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. முத்து, தனது சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவுவது வழக்கம் என்று கூறியுள்ளார். அவர் பேசுகையில், “நகைச்சுவை எனக்கு ஒரு தொழில். ஆனா அன்பு எனக்கு ஒரு பொறுப்பு. சிரிப்பை நம்மால் கொடுக்க முடியும் என்றால், ஒரு சின்ன உதவியையும் நம்மால் செய்ய முடியும்.” என்றார். இந்த வரிகள், அவரின் மனிதநேயம் நிறைந்த மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றன. இந்த தீபாவளியில் பலரும் விளக்குகளை ஏற்றும் போது, முத்து தனது அன்பின் விளக்கை ஏற்றியுள்ளார்.
மேலும். முத்து கூறியவதை கேட்ட வியாபாரிகள் “மக்கள் பெரிய கடைகளுக்கு போறாங்க. ஆனா முத்து மாதிரி நபர்கள் இப்படி சொல்லும்போது நம்ம கடையிலும் வியாபாரம் உயரும்.” இதன் மூலம், சமூகப் பொறுப்புடன் கூடிய நட்சத்திரங்களின் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதும் வெளிப்படுகிறது. முத்துவின் செயல், தீபாவளியை ஒரு சாதாரண பண்டிகையாக இல்லாமல், மனிதநேயத்தின் திருநாளாக மாற்றியுள்ளது. அவர் காட்டிய செயல், அன்பு, ஒற்றுமை, பகிர்வு ஆகியவற்றின் அழகிய கலவையாகத் திகழ்கிறது. மக்கள் இதனை ஒரு “சிறந்த முன்மாதிரி செயல்” எனக் கூறுகின்றனர்.
ஆகவே விஜய் டிவி ‘கலக்க போவது யார்’ நிகழ்ச்சியின் நகைச்சுவை நட்சத்திரமாக மட்டுமல்லாமல், மனிதநேயத்தின் ஒளியாகவும் திகழ்ந்தார் KPY மதுரை முத்து. அவர் அன்பு பகிர்ந்த அந்தச் சிறிய செயல், பலரின் இதயத்திலும் ஒளி ஏற்றியுள்ளது. தீபாவளி என்றால் விளக்குகள், பட்டாசுகள் மட்டுமல்ல - அன்பையும் சிரிப்பையும் பகிர்வது என்பதையும் அவர் தனது செயலில் நிரூபித்துள்ளார். அவரின் வார்த்தைகளில், “மகிழ்ச்சியை பகிர்ந்தால் தான் அது பெருகும், தீபாவளி ஒளி எல்லோருக்கும் பரவட்டும்” என்றது பேசுபொருளாக மாறியுள்ளது.

மதுரை முத்துவின் தீபாவளி கொண்டாட்டம், சமூகத்தில் மனிதநேய ஒளியை மீண்டும் பிரகாசமாக ஏற்றியுள்ளது. இப்படிப்பட்ட கலைஞர்கள் தான் நம் சமூகத்தின் உண்மையான ‘ஒளி மனிதர்கள்’ என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: இப்படி இருந்தா எப்படி மேடம்..! கவர்ச்சியில் தாராளமாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..!