இந்திய திரையுலகில் சினிமா ஜோடிகளின் வாழ்க்கை குறித்து பேசாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்ததிலிருந்து, இவர்களை குறித்த செய்திகளும் இணையதளத்தில் வந்த வண்ணமே உள்ளது.

மேலும், பல ரசிகர்களின் கவனத்தின் ஈர்த்த ஜோடிகளின் வரிசையில் முதலாவது இடத்தில் இருப்பவர்களே இவர்கள் தான். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகின்றனர். ஏற்கனவே இவர்களது திருமண ஆவணப்படத்தின் மீது நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்பொழுதி சந்திரமுகி படக்குழுவினரும் ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் தங்களது படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதையும் படிங்க: நயன்-க்கு வந்த அடுத்த தலைவலி.. ஆவணப்பட வழக்கில் மேலும் ஒரு சிக்கல்..!

இந்த சூழலில், தனது அழகான இரண்டு ஆண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி. ஆனால் சமீபத்தில், இந்த தம்பதிக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அந்த செய்திகளில் உண்மையில்லை என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக, சமூகவலைதளத்தில் பரவியிருந்த ஒரு போலியான இன்ஸ்டாகிராம் பதிவி தான் இந்த வதந்திக்கே தற்பொழுது காரணமாகியுள்ளது. சமீபத்தில் "குறைவான அறிவுடைய ஒருவரை திருமணம் செய்தால், அது ஒரு தவறாக மாறும். கணவரின் செயல்களுக்கு பொறுப்பேற்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள்" என்ற வார்த்தைகள் கொண்ட ஒரு பதிவு, நயன்தாரா இணையதள பக்கத்திலிருந்து வெளியாகி டெலீட் செய்யப்பட்டது.

இதை பார்த்த நெட்டிசன்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவிட்டது சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் என பரபரப்பை கிளப்பினர். இந்த பதிவை உடனே நயன்தாரா நீக்கிவிட்டதாகவும், உண்மையில் இந்த பதிவு அவர் பதிவிட வில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் விரைவில், தங்கள் ஸ்டைலில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என பலரும் தெரிவித்த நிலையில், " சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். அங்கு நண்பர்களுடன் சிறிய அளவிலான இரவு பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு, சிரித்துக்கொண்டே மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் தெரிய வந்துள்ளது. இது போன்று பல விஷயங்களில், அவர்கள் வெளிப்படையாக பேசியும், செயல்களால் விளக்கியும் "இருக்கிறார்கள்.

இப்படி இருக்க, இவர்கள் இருவருக்கும் இடையே எந்த விதமான மனப்பிரச்னையும் இல்லை என்பது அவர்களது நடக்கையிலே தெரிகிறது. இவர்கள் காதலிக்கத் தொடங்கிய ‘நானும் ரவுடிதான்’ (2015) திரைப்படத்திலிருந்து இன்று வரை, தங்களது உறவை மிகுந்த மரியாதையுடனும், தெளிவுடனும் பாதுகாத்து வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இருவரும் குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழில்துறையிலும் பிஸியாக இருப்பது நமக்கு தெரிந்ததே. தற்போது விக்னேஷ் சிவன் புதிய படத்தின் பணியில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம், நயன்தாராவும் பல திரைப்படங்களில் நடித்து வருவதால், இருவரும் தங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக பிரபல ஜோடிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பரப்பப்படும் வதந்திகள், உண்மையிலேயே அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும். அந்த வகையில் இவர்களது பிரிவு வதந்தியும் அதே பாதையில் சென்றது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நெருங்கிய வட்டாரங்களும் தற்பொழுது உறுதி செய்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இப்படி ஒரு சர்ப்ரைஸ எதிர்பார்க்கலைல.. நயன் - விக்கி தம்பதி யாருடன் திருமண நாளை கொண்டாடி இருக்காங்க பாருங்க..!