விக்ரமின் '10 எண்றதுக்குள்ள' படத்தில் சுட்டித்தனமான பெண்ணாகவும், 'அஞ்சான்' திரைப்படத்தில் சூர்யாவை கவரும் அழகிய ஹீரோயினாகவும் வந்து "ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே" என பாடலுக்கு நடனமாடி இளசுகளை காதல் வயப்பட வைத்தார். இப்படி, பார்க்க குட்டி குஷ்பூவை போல் இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

மேலும், இவரது நடிப்பில் நடிகர் விஜயுடன் வெளியான 'கத்தி' திரைப்படத்தில் "நான் குளிச்சிட்டு, ஃபிரஷ் பண்ணிட்டு வரேன்... பாய்" என குழந்தை தனமாக பேசி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். பின் 'தெறி' படத்தில் நடிகர் விஜயிடம் சாகும் தருவாயில் "நான் உனக்கு எப்படி பட்ட மனைவி" என கேட்டு அனைவரையும் கலங்க செய்தவர். அதே போல் 'மெர்சல்' திரைப்படத்தில் நடிகர் விஜயை பார்த்து "டேய் தம்பி உன்னதாண்டா வாடா.. எனவும் அக்கா உனக்கு ரோஸ்மில்க் வாங்கித்தரேண்டா" எனவும் கூறி பலரது மனதில் ஆழமாக பதியப்பட்டார்.
இதையும் படிங்க: அவர் என் குடும்பத்தில் ஒருவர்..! சமந்தா சொன்ன அந்த ஸ்பெஷல் நபர் யார்..?

இப்படி, எல்லோருக்கும் தெரிந்த நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா" என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இப்படி இருக்க, நாக சைத்தன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு ஏற்பட்டு பிரிந்த நடிகை சமந்தா, அதன் பின் பல வருடங்களாக திரையுலகின் பக்கம் அடியெடுத்து வைக்க வில்லை.

இதுவரை, தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, தங்க மகன், 10 என்றதுக்குள்ள, பெங்களூர் நாட்கள், தெறி, 24, மெர்சல், யூ டர்ன், நடிகையர் திலகம், சீமராஜா, இரும்பு திரை, ஓ. பேபி, சூப்பர் டீலக்ஸ், புஸ்பா (தி ரைஸ்), யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல், குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சமந்தா.

இப்படி இருக்க, கடந்த சில நாட்களாக பல மேடைகளை சந்தித்து வரும் சமந்தா, அனைவருக்கும் தன் வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்து வருவதுடன், மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் குறித்து கண்ணீர்மல்க கூறி வருகிறார். மேலும், தற்பொழுது ரூ.1200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ஹிட் இயக்குனர்களின் இரண்டு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை சமந்தா படங்களில் பிசியாக உள்ளார்.

இந்த சூழலில், ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் ஒருவர் சமந்தாவிற்கு 2023ம் ஆண்டு கோவில் கட்டிய நிலையில், மீண்டும் ரசிகர் ஒருவர் சமந்தா மீது உள்ள பாசத்தால் சமந்தாவின் சிலையை வடிவமைத்து அதை கோவிலாக கட்டியுள்ளார். இந்த இடம் எங்குள்ளது என பார்த்தால் ஆந்திராவில் உள்ள பாப்ட்டலா என்னும் இடத்தில உள்ள அளப்படு கிராமத்தில் இந்த கோவிலை கட்டி இருக்கிறார் சமந்தா ரசிகர்.

சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி இந்த கோவிலை அவர் திறந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சமந்தா போட்ட ஒரு லைக்..! நாக சைதன்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!