பிரமாண்ட தயாரிப்புகள், பிளாக்பஸ்டர் ஹிட்டுகள் மற்றும் பான் இந்தியன் ரசிகர்களின் ஆதரவு என இவை அனைத்திலும் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். 'பாகுபலி' வெற்றியைத் தொடர்ந்து, இவர் நடித்துள்ள ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம், தனது விஞ்ஞான கதையம்சத்தால் உலகமெங்கும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது, பிரபாஸின் கிராஸ் பான்டரி ஸ்டார் என்பதற்கான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபாஸ் தனது அடுத்த படமான ‘தி ராஜா சாப்’ படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை தெலுங்கு சினிமாவின் வெற்றிக் இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். இதுவரை ரொமாண்டிக் காமெடி, குடும்ப கதைகள் போன்ற லைட்டான ஜான்ர்களில் பல ஹிட் படங்களை இயக்கிய மாருதி, இந்த முறை முற்றிலும் மாறாக ஹாரர் திரில்லர் கதையைத் தேர்ந்தெடுத்து, பிரபாஸுடன் இணைந்து ஒரு புதுமையான பாணியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி இருக்க ‘தி ராஜாசாப்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் டீசர் வீடியோ, சில மாதங்களுக்கு முன்பு வெளியான போது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபாஸ் ஒரு வித்தியாசமான தோற்றத்துடன், ஜாலியான நகைச்சுவை மற்றும் ஹாரர் கலவையுடன் காட்சியளித்த விதம் ரசிகர்களிடையே புதிய வகை எதிர்பார்ப்பை உருவாக்கியது. மேலும் படத்தின் பாணி, டீசரிலேயே தெரிந்த ஹாரர் காட்சி, ஸ்டைலான காட்சிப்பதிவு ஆகியவை இந்த படத்தை மக்கள் மனதில் ஒரு தனி லைனில் நிறுத்தியுள்ளது.

டீசரில் உள்ள ரெட்லைட் தோற்றம், சூடான பேக்ரவுண்ட் ஸ்கோர் மற்றும் பிரபாஸ் பாணியில் வந்த பஞ்ச-லைன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சூழலில் அனைவரது எதிர்பார்ப்பையும் ஏகுறச் செய்த இப்படம் முதலில் 2024 டிசம்பர் 5-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு பான் இந்தியன் படத்திற்கு தேவைப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸ், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் நீளமான செயல்முறை காரணமாக, படக்குழு ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது. இப்படி இருக்க இதில் புதிய அப்டேட் என்னவெனில், ‘தி ராஜாசாப்’ திரைப்படம், சனிக்கிராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் பான் இந்தியன் ரீதியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'கதைக்காக முத்த காட்சியாக இருந்தாலும் நடிப்பேன்'..! ‘பிளாக்மெயில்’ நடிகை தேஜூ அஸ்வினி ஓபன் டாக்..!
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸுடன் இணைந்து இப்-படத்தில் முன்னணி கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் நடித்துள்ளனர். இதில் ஒவ்வொருவருக்கும் முக்கியமான வேடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சிறப்பாக ஹாரர் பின்னணியில் வித்தியாசமான கேரக்டர்களில் அவர்களை பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாலிவுட் சினிமாவின் பவர்ஃபுல் நட்சத்திரமாக திகழும் சஞ்சய் தத், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பது, ரசிகர்களிடம் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டி.ஜி. விஷ்வா பிரசாத் அவர்கள் தயாரிக்கிறார். முன்னதாக பல பான் இந்தியன் படங்களை வெற்றிகரமாக உருவாக்கிய இந்த நிறுவனம், ‘தி ராஜாசாப்’ படத்திற்கும் பிரமாண்ட தரத்துடன் உருவாக்கி உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து முக்கிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

‘தி ராஜாசாப்’ திரைப்படம், பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்க இருக்கிறது. இதுவரை அவர் நடித்த பிரமாண்டமான, புராண கதையம்சம் கொண்ட படங்களைவிட, இந்த ஹாரர் கலந்த திரில்லர் படம் நகைச்சுவை கலவையாக அவரின் புதிய பக்கம் என்பதை காட்ட இருக்கிறது.
இதையும் படிங்க: திரையில் சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு..! இந்த நடிகர் தான் நடிக்கனும்..டென்னிஸ் வீராங்கனை பிடிவாதம்..!