தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தனது அழகு, நடிப்பு திறமை, மெதுவான உரையாடல் பாணி, துணிச்சலான சமூக கருத்துகள் என பன்முகத் தன்மையுடன் கலையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ள நடிகை, இப்போது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய பக்கம் ஒன்றைத் திறக்கப் போகிறார்.
அவர் சமீபத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கைத் துணை தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள், ஊடகங்கள், திரையுலக நண்பர்கள் அனைவரும் இதற்காக வாழ்த்துகளும், ஆச்சரியங்களும் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க நிவேதா பெத்துராஜின் வாழ்க்கையில் முக்கிய நபராக அறிமுகமாகியுள்ளார் ரஜித் இப்ரான். அவரது பின்புலம், தொழில்துறை விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இணைத்தது என்பது துபாய் என்கிற நகரம். 5 வருடங்களுக்கு முன்பு, துபாயில் நடந்த ரேஸ் ட்ராக் நிகழ்வில் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாக நிவேதா கூறியிருக்கிறார். அதன்பிறகு, சில நிகழ்ச்சிகள், நண்பர்கள் கூட்டங்களில் இடைவிடாமல் சந்தித்து வந்த நிலையில், அந்த உறவு விரைந்து வளர்ந்திருக்கிறது. இதனை குறித்து நிவேதா பேசுகையில், “அவர் நல்லவர். நம் வாழ்வில் சிலர் நம்மைக் கூட நமக்கே அறிமுகப்படுத்துவார்கள். அப்படித்தான் அவர் எனக்காக இருந்தார்.” என்று, நிவேதா கூறியுள்ளாா். துபாயில் தனது பள்ளிக்கல்வியை முடித்திருக்கிற நிவேதாவிற்கு அந்த நகரம் மிகவும் நெருக்கமானது. அதனாலேயே இந்த உறவு துவங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி “முதலில் நாங்கள் நண்பர்கள். அப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினோம். ஆனால், எப்போதோ நம் வாழ்க்கை ஓர் திருப்பத்தை எடுக்கும். அப்படித்தான் நாங்கள் காதலர்களாக மாறினோம்” என்று நிவேதா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நிவேதா ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருடைய காதலர் ரஜித் இப்ரான் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இரண்டும் விருப்பத் திருமணமாக ஒருமனதாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. “மதம், மொழி, சமூக நிலை... இவை எல்லாம் எங்களுக்குள் பிரிக்க முடியவில்லை. எங்கள் உறவின் மேல் இருவீட்டாரும் முழுமையான நம்பிக்கை வைத்தனர். அதனால் தான் எளிமையாக திருமண முடிவை எடுத்தோம்.” என நிவேதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒருவழியாக தனது காதலனை கண்முன் காட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்..! ஜோடி பொருத்தம் அமோகம்..!
மேலும் தற்போதுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், நிவேதா மற்றும் ரஜித் இப்ரான் ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு, நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரையுலக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பின் 2026 ஜனவரி மாதத்தில், இவர்களின் திருமண விழா நடைபெறவுள்ளது. பங்கேற்கும் விருந்தினர்களின் பட்டியல் குறைக்கப்பட்டிருப்பது, இந்த திருமண விழா எளிமையாக நடத்தப்படும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது தொடர்பாக நிவேதா, “அதிக விளம்பரமில்லாத ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கட்டும் என விரும்புகிறோம்” என கூறியிருக்கிறார். ஆகவே நிவேதா பெத்துராஜ் தனது திரைபயணத்தில் மட்டுமன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெற்று வருவதை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இவர் எடுத்த முடிவு தனிப்பட்டது மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமைக்கும் உதாரணமாக அமைந்துள்ளது.

திருமணத்திற்கான திட்டங்கள் தயாராகி வரும் இந்த நிலையில், நிவேதா ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவரது அடுத்த பட அறிவிப்புகளும் வரலாம். காதலால் மட்டும் இணைக்கப்படும் உறவுகள் மிகவும் ஆழமானவை. அத்தகைய உறவிற்கு வாழ்த்து கூறும் நேரம் இது.
இதையும் படிங்க: நடிகர் பிரேம்ஜி வீட்டில் விஷேசம்...! 'அப்பா' ஆக போகிறாரா..? இணையத்தில் அலைமோதும் வாழ்த்து மழை..!