விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஸ்வேதா. தமிழ் டெலிவிஷன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் தனது தனி வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் மிக பெரிய சர்ச்சையை சந்தித்து வருகிறார். அதாவது முன்னாள் காதலர் என கூறப்படும் ஆதி என்ற ஒருவர், நேற்று ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து, ஸ்வேதா தன்னை காதலித்ததாகவும், திருமணமாகி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஸ்வேதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் அந்த பேட்டியில் வெளியிட்டு, இருவரும் இன்றும் நெருங்கி உள்ளோம் எனத் தோன்றுமாறு ஒரு பரபரப்பான செய்திகள் உருவாகிவிட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவ, ஸ்வேதாவின் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இப்படி இருக்க இந்த தகவல்களை முற்றிலுமாக எதிர்த்து, நடிகை ஸ்வேதா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மிக கடுமையான மற்றும் உணர்வுபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறுகையில், “அவன் என் கணவர் கிடையாது, காதலரும் கிடையாது. அவன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் அவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சினிமா பிரபலங்கள் தான் நம்ப டார்கெட்..! ஐஸ்வர்யா ரஜினியை தொடர்ந்து நடிகை வீட்டில் கைவரிசை..!

நாங்கள் ஏற்கனவே பிரிந்து விட்டோம். தற்போது நாங்கள் ஒன்றாக இருப்பது போல பொய்யான பேட்டிகள் மூலம் என் வாழ்க்கையை கெடுக்க முயற்சி செய்கிறான். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறேன். அவனை நம்பி ஒரு கட்டத்தில் நான் மிக பெரிய தவறு செய்தேன். ஆனால் பின்னாளில் அவனது உண்மை முகம் மற்றும் குற்றப் பின்னணி எனக்குத் தெரியவந்தது. தற்போது அவன் சமூக ஊடகங்கள், பேட்டிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் என்னை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறான்.

அவனுடன் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் தனியாக தான் எல்லாவற்றையும் சமாளிக்கிறேன். ஆனால் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் தன்னை "கணவர்" என கூறும் நபர் ஒரு மோசடி நபர் என்றும், அவனிடம் இருந்து தன்னை தனித்துவமாக பிரித்துவிட்டதாகவும், அவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்றும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும் அவனை போலீசார் தேடி வருகிறார்கள் என்றும், அவனை ஆதரிப்பவர்களும் சட்டரீதியாக நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொய்யான காதல் மற்றும் திருமணக் கதைகளை பரப்புவதன் மூலம் தனது வாழ்க்கையை சிதைக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார் என்றும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவன் தனக்கு தெரியாமல் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும், அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். தன்னை தொடர்புகொள்ள விரும்புவோர், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவனை ஆதரிக்காதீர்கள், பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள், எனது நிலையை புரிந்து கொள்ளுங்கள்” எனவும் அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஸ்வேதாவுக்கு சமூக வலைத்தளங்களில் இருந்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆகவே நடிகை ஸ்வேதா தனது தனி வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த பொய்யான தகவல்களை எதிர்த்து, தனது உரிமையை உறுதியுடன் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கையைத் தவறாக சித்தரித்து, பொது வெளியில் அவமானப்படுத்தும் முயற்சிகள் எதிர்காலத்தில் குறைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடக்கும், ஆதி மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது. சட்டப்படி நேர்மையான தீர்வு கிடைக்க, பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரவி மோகனுக்கு டைம் சரியில்ல போல.. வாங்கிய கடனுக்கு EMI கட்டல.. ECR சொகுசு பங்களாவிற்கு டார்கெட்..!!