ஊரே கலவரமாக இருக்கும் பொழுது ஒரு சிலர் நமக்கு எதுக்குடா வம்பு இருக்குற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிடுவோம் என இருப்பார்கள் அதே போல் தான் தற்பொழுது பாக்கிஸ்தான் நிலைமை மாறி உள்ளது. பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய ஒரே ஒரு தாக்குதலால் இன்று பெரிய சேதங்களை சந்தித்து வருத்தத்தில் உள்ளனர்.

காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 26 பேரை கொடூரமாக சுட்டு கொன்றது. இதில் திருமணமாகி ஹனிமூனுக்கு வந்த ராணுவ கடற்படை வீரரும் சுட்டு கொல்லப்பட்டதால் இது ராணுவத்தின் கவுரவ பிரச்சனையாக மாறியது. இதனால் பயந்து போன பாக்கிஸ்தான் அரசாங்கம், இங்க பாருங்க இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் என பயத்தில் பிதற்றிக்கொண்டு இருக்க, இந்தியா எதையும் காதில் வாங்காமல் முப்படைகளையும் தயார் நிலைக்கு கொண்டு வந்தது.
இதையும் படிங்க: "பழிக்கு பழி நியாத்திற்கான போராட்டத்திற்கு கிடைத்த நீதி"..! அல்லு அர்ஜுன் ஆவேச பதிவு..!

இதனை பார்த்து பயந்து போன பாக்கிஸ்தான் ராணுவம், தங்களது பலத்தை காண்பித்து அமைதியாக்கி விடலாம் என நினைத்து, போருக்கான ஒத்திகை என ஆயுதங்கள் அடங்கிய காட்சிகளை வெளியிட, இந்தியாவும் தங்களது ராணுவ பலத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டது. இதில் முன்பாக வீடியோவை காண்பித்து கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பின்பாக தீவிரவாத அமைப்புகளுக்கு புள்ளி வைத்து வந்தது பாக்கிஸ்தான் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.

பாகிஸ்தானை முன்பாக ஆடவிட்டு பின்பு ஆட்டம் காட்ட நினைத்த இந்தியா, தான் உறுதிப்படுத்திய 9 பயங்கரவாத அமைப்பின் இடங்களையும் குறிவைத்தது. பின் எப்படி தாக்குதல் நடத்தலாம் தரைவழியாக நடத்தலாமா அல்லது வான்வழி தாக்குதல் நடத்தலாமா. 200 கிலோமீட்டர் தூரம், இந்தியாவிலிருந்து எப்படி என அனைத்தையும் யோசித்து முடிவு செய்த பின்னர் ராணுவ அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பிரதமரை சந்தித்து "இந்தியாவில் இருந்தபடியே ட்ரோன் வழி தாக்குதல் நடத்தி அழிக்கலாம்" என சொல்ல, பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்து கையெழுத்து போட, அதன் பின் ராணுவ வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் தாக்குதல் 1.44 மணியளவில் அரங்கேற்றப்பட்டது.

இந்த தாக்குதலை துல்லியமாக கணக்கிட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கும் பாக்கிஸ்தான் ராணுவ தலங்களுக்கும் எந்த சேதமும் இல்லாமல் தீவிரவாத அமைப்புகளை மட்டுமே குறிவைத்து அளித்துள்ளது. இப்படி இருக்க பாக்கிஸ்தான் மக்கள் பயத்துடன் இருக்கும் இந்த வேளையில், ஹனியா அமீர் என்ற பாக்கிஸ்தான் நடிகை தனது எக்ஸ் தளபக்கத்தில் "நான் உடனே பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறேன். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த பாக்கிஸ்தான் மக்கள் அப்பொழுது மீண்டும் தாக்குதல் நடைபெறுமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஒரே தாக்குதலில் ஜீரோவான பயங்கரவாத அமைப்புகள்"..! நடிகை கங்கனா அசத்தல் பதிவு..!