இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் இருக்க பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் நடுக்கத்தில் உள்ள இந்த நேரத்தில் மீண்டும் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் முக்கிய வான்வழி தடங்கள் முதல் விமான சேவைகளை வரை அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது இந்தியா.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா இந்த தாக்குதலை பற்றி விளக்கமளித்து வருகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு அடுத்து இந்திய நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய எல்லையில் உள்ள தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து எந்த சிவில் விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "சவால் விட்டால் கடைசியில் இதுதான் நிலைமை"..! தீவிரவாத அமைப்புக்கு மோகன்லால் காட்டமான பதிவு..!

இப்படி ஒரு பக்கம் மகிழ்ச்சி அனைவரையும் சூழ்ந்து இருந்தாலும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து மீண்டும் தாக்குதல் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் ராணுவத்தினர் கண்களை விழிப்புடன் வைத்து காத்து வருகின்றனர். இப்படி நாடே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு என்ன நடந்தது என பார்த்தால், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், பல திரை துறையினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை கங்கனா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இந்தியாவின் தாக்குதல் தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதன் கீழ், "ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற தலைப்பை வைத்து, இந்திய ஆயுதப்படைகள் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற துல்லியமான திட்டத்தைத் தொடங்கின; பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் முழுவதும் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. சாட்சிகள் இதோ" என பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "சவால் விட்டால் கடைசியில் இதுதான் நிலைமை"..! தீவிரவாத அமைப்புக்கு மோகன்லால் காட்டமான பதிவு..!