அகிம்சை வழியில் ஜெயிக்க வேண்டும் என்று உலகத்திற்கே சமாதானத்தை அறிவிக்கும் இந்திய நாட்டையே இப்படி கோபப்பட்டு தாக்க வைத்துள்ளதே பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என உலக நாடுகள் உற்று நோக்கும் வகையில் அமைந்துள்ளது நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய "ஆப்ரேஷன் சித்தூர்" தாக்குதல்.

இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் எதுவும் கண்டனம் தெரிவிக்காத நிலையில், மீண்டும் சீண்டினால் மீண்டும் அடிப்போம் என்பதை உறுதிபட காண்பித்துள்ளது இந்திய ராணுவம். இந்த தாக்குதலுக்கு தொடக்க புள்ளியாக இருந்தது காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் தான். இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.
இதையும் படிங்க: "இந்தியாவுக்கு ஒண்ணுன்னா இந்திய ராணுவம் வரும்".. பெருமிதம் கொண்ட மலையாள நடிகர் மம்முட்டி..!

இந்த தாக்குதலால் மிகவும் கோபமடைந்த இந்தியா கண்டிப்பாக பதில் அடி கொடுப்போம் என கூறிவந்தது. ஆனால் வழக்கம் போல் இந்திய அரசியல் தலைவர்கள் முதல் ராணுவ கமேண்டோக்கள் வரை சும்மா விளையாட்டுக்கு இப்படி கூறிவருகின்றனர் என நினைத்து பயங்கரவாத அமைப்புகள் அசால்ட்டாக இருந்த நேரத்தில், அதிரடியாக 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயங்கவாதிகளின் 9 கூடாரங்களை ட்ரோன்களை வைத்து தாக்கி அளித்துள்ளது இந்திய ராணுவம். இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீக்கிரமாக இந்த தாக்குதலை முடிவிற்கு கொண்டு வாருங்கள் என இந்தியாவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.

இப்படி இருக்க, பல அரசியில் தலைவர்கள் முதல் பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்கள் வரை இந்திய ராணுவத்தை பாராட்டி வரும் நிலையில், தற்பொழுது மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தனது ஆதங்கத்தை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.

அதன்படி அவரது எக்ஸ் தலைப்பக்க பதிவில் " நாங்கள் சிந்தூரத்தை ஒரு பாரம்பரியமாக மட்டுமல்ல, எங்கள் அசைக்க முடியாத உறுதியின் அடையாளமாகவும் அணிந்தோம். எங்களுக்கு சவால் விடுங்கள், நாங்கள் அச்சமின்றி, எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுவோம். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு துணிச்சலான இதயத்திற்கும் வணக்கம். உங்கள் துணிச்சல் எங்கள் பெருமையைத் தூண்டுகிறது. ஜெய் ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது தான் எங்கள் இந்தியா..! இந்திய ராணுவத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்..!