என்றுமே ஆவேசமாக பேசும் பிரகாஷ்ராஜ் தற்பொழுது பாகிஸ்தான் தாக்குதலை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். காரணம் என்ன என பார்த்தால் காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்.
இந்த தாக்குதலில் அநியாயமாக இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

இதனால் பல அரசியல் தலைவர்கள், நாட்டு மக்கள் அனைவரும் கொந்தளித்த நேரத்தில் இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் தான், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது.
"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Anna Serial: மயங்கி விழுந்த பாக்கியம் - சௌந்தரபாண்டிக்கு பரணி கொடுத்த ஷாக்!

இதனை அடுத்து தற்பொழுது அனைத்து கட்சி கூட்டம் கூட்டடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காண சென்றுள்ளார். இப்படி ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை நினைத்தது மக்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தல பக்கத்தில் ப்ரஸ் மீட் நகலை இணைத்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த லெட்டர் பேடில், " சிந்தூர் நடவடிக்கை: பயங்கரவாத முகாம்களில் இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதலை நடத்தின. என்ற தலைப்புடன் ஆரம்பித்து ,சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐத் தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கின. மொத்தத்தில், ஒன்பது (9) தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்தி, அளவிடப்பட்டு, இயற்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. எந்த பாகிஸ்தானிய இராணுவ வசதிகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். இன்று பிற்பகுதியில் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விரிவான விளக்கவுரை நடைபெறும்." என இருந்தது.

இதற்கு மேல் நடிகர் பிரகாஷ்ராஜ், வணக்கம் செலுத்துகிறேன்.. இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது.. என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஒரே தாக்குதலில் ஜீரோவான பயங்கரவாத அமைப்புகள்"..! நடிகை கங்கனா அசத்தல் பதிவு..!