பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது ஆனால் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்தியா தாக்காமல் பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் அவர்களது பயிற்சி இடங்களை மட்டும் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம். மேலும், இந்திய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. குறிப்பாக இந்த தாக்குதலில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரது வீடும் பயிற்சியகமும் நான்கு ட்ரோன்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வச்ச குறி தப்பல.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள்..!

இந்த தாக்குதலுக்கு அடுத்து இந்திய நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய எல்லையில் உள்ள தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து எந்த சிவில் விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களைத் குறித்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தற்பொழுது விளக்கமளித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தத் தாக்குதலை இந்தியா சீக்கிரம் முடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இப்படி இருக்க, பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இந்திய ராணுவத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், மலையாள நடிகர் மம்முட்டியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி, மலையாள நடிகர் மம்முட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் " மீண்டும் நிரூபிக்கப்பட்டது, தேசம் அழைக்கும்போது, #இந்திய இராணுவம் பதிலளிக்கிறது. உயிர்களைக் காப்பாற்றியதற்கும் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்கும் நன்றி. நீங்கள் தேசத்தைப் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ஜெய் ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது தான் எங்கள் இந்தியா..! இந்திய ராணுவத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்..!