பாலிவுட் ரசிகர்களிடம் பரபரப்பாக கொண்டாடப்பட்ட நடிகைகளில் முக்கியமானவராக திகழ்கிறார் பரினீதி சோப்ரா. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான Ladies Vs Ricky Bahl திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது திரை பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அசாதாரண முகபாவனைகள், இயல்பான நடிப்பு மற்றும் அழகான குரலால் ரசிகர்களை கவர்ந்த பரினீதி, இப்போது தனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார்.
அதாவது பிரியங்கா சோப்ரா என்ற உலக பிரபலமான நடிகையின் உறவினராக பரினீதி சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில வெற்றிப் படங்களை தந்தாலும், பின்னாளில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் படப்பிடிப்புகள் குறைவாகவே இருந்தது. சில படங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவார் என்ற பேச்சு வதந்தியாக பரவியது. ஆனால், பரினீதி சோப்ரா தொடர்ந்து தன்னை சோதித்துக் கொண்டே முன்னேறினார். சிறந்த வாய்ப்புகள் தேடி, தன்னுடைய திறமையை ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்க தொடங்கினார். இந்த முயற்சி காரணமாகவே, இன்று மீண்டும் ஒரு முக்கியமான செய்தியுடன் அவர் திரும்பியுள்ளார். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு, இந்திய அரசியல் களத்தில் தனது தனிச்சாயலால் பிரபலமானவர் ராகவ் சத்தா. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர், சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரும் பரினீதியும் நீண்ட நாள் நண்பர்கள். இந்த நட்பு காதலாக மலர, இருவரும் அதனைத் தங்களது உறவாக மாற்றிக் கொண்டனர். 2023 செப்டம்பரில், ராஜஸ்தானில் நடந்த பிரம்மாண்ட திருமண நிகழ்வில் இருவரும் வாழ்நாள் துணையாக இணைந்தனர். அந்த திருமண நிகழ்வுகள் நாடு முழுக்க மிகுந்த கவனத்தை பெற்றிருந்தன.

அதோடு பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கலந்துகொண்ட அந்த திருமண விழா, சமூக வலைத்தளங்களில் வைரலானது. பாரம்பரிய உடைகளில் இருவரும் மின்னிய புகைப்படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படி இருக்க இப்போது, திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பரினீதி தான் கர்ப்பமாக இருப்பதாக, இனிமையான ஒரு புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்படும் அந்த புகைப்படத்தில், பரினீதி தனது குட்டி இடுப்பினை பிடித்து, நிதானமாக சிரிக்கிறார். பக்கத்தில் ராகவ் சத்தா அவரை பிடித்துக் கொண்டபடி, மிகுந்த பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அய்யோ.. முதல்ல அவன் என் புருஷனே கிடையாது...! இன்ஸ்டாவில் கதறும் சீரியல் நடிகை..!
புகைப்படத்தின் பின்னணியில் ஒரு சூரியாஸ்தமன அமைதி, அந்த படத்துக்கு ஒரு மென்மையான உணர்வை வழங்குகிறது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சமூக வலைத்தளங்கள் மற்றும் பாலிவுட் வட்டாரம் முழுவதும் வாழ்த்து மழை பெய்துக் கொண்டிருக்கிறது. மேலும் பரினீதி தற்போது எந்த திரைப்படங்களிலும் பிசியாக இல்லாத நிலையில், கர்ப்பகாலத்திற்குத் தேவையான ஓய்வு மற்றும் அமைதியை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு சினிமாவிற்கு திரும்பி வருவாரா? இல்லையா? என்பதற்கு நேர்மையான பதில் இன்னும் இல்லாவிட்டாலும், பரினீதி அளிக்கும் பாசமும் பரிமாற்றமும் ரசிகர்களிடையே எப்போதும் கவனத்தை உருவாக்கி வருகின்றது. ஆகவே பரினீதி சோப்ரா – ராகவ் சத்தா தம்பதியரின் வாழ்க்கையில் புதிய பருவம் தொடங்கியிருக்கிறது.

இது அவர்களது உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. ஒரு புதிய உயிரை வரவேற்கத் தயாராகும் இந்த தம்பதியருக்கு, இந்தியா முழுவதும் வாழ்த்து சொல்லும் கணங்கள் இப்போது நிஜமாக நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: சினிமா பிரபலங்கள் தான் நம்ப டார்கெட்..! ஐஸ்வர்யா ரஜினியை தொடர்ந்து நடிகை வீட்டில் கைவரிசை..!