இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் தான் "கண்ணப்பா". காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம்.

இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் அதிரடியாக வெளியாக உள்ளது. இந்த சூழலில், இப்படத்தின் கிராபிக் காட்சிகள் அடங்கிய முக்கியமான ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு உள்ளது என சமீபத்தில் கூறியிருந்தனர். அதன்படி, மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டுடியோஸில் இருந்து முக்கியமான கிராபிக்ஸ் அடங்கிய ஹார்ட் டிரைவரை, கொரியர் மூலமாக 'போர் பிரேம்ஸ் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பட குழுவினர். அதனை இருவர் ஏமாற்றி எங்கேயோ அனுப்பிவிட்டதாக படக்குழுவினர் பகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் விடுதியில் இருந்த 50 திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த செய்தி உலகையே உலுக்கி உள்ள நிலையில், விமான விபத்து காரணமாக, இந்தூரில் நடைபெறவிருந்த ''கண்ணப்பா'' டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி விஷ்ணு மஞ்சு அவரது எக்ஸ் தல பக்கத்தில் அதற்குண்டான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், " இன்றைய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் என் இதயம் நொறுங்கிப்போனது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் இந்த வேளையில் #கண்ணப்பா டிரெய்லர் வெளியீட்டை ஒரு நாள் ஒத்திவைத்து, நாளை இந்தூரில் நடைபெறவிருந்த ப்ரிரிலீஸ் நிகழ்வை ரத்து செய்கிறோம். கற்பனை செய்ய முடியாத இந்த கடினமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் நானும் இருந்து கடவுளிடம் பிரார்த்திகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்னில்ல ரெண்டில்ல 1600 தியேட்டரில் தனுஷ் படம்.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் தகவல்..!