இன்று இந்திய மாடலிங் உலகம் பிரபலமான ஒருவரை இழந்துள்ளது. மிஸ் புதுச்சேரி பட்டம் பெற்ற 25 வயதான சான் ரேச்சல், கடந்த வாரம் தனது வீட்டில் அதிக அளவு இரத்த அழுத்த மாத்திரைகளை உண்டதால், தீவிரசிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தற்போது மாடலிங் மற்றும் பேஷன் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடல் அழகியான சான் ரேச்சல் தனது தனித்துவமான கருப்பு நிற சருமத்தால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றிருந்தார்.
சாதாரணமாக அழகுக்கு வெண்மை எனும் கருத்தை எதிர்த்து, தனது இயற்கை தோற்றத்தை பெருமையுடன் காட்டி, ‘கருப்பும் அழகு’ தான் எனும் எண்ணத்தை பலரது மனதிலும் ஆழமாக விதைத்தவர். அவர் வென்ற பட்டங்களே அவரது திறமையை பிரதிபலிக்கின்றன. இவரது முக்கியமான வெற்றிகள் என பார்த்தால், " மிஸ் பாண்டிச்சேரி 2020–2021, மிஸ் டார்க் க்வீன் தமிழ்நாடு 2019, மிஸ் வர்ல்ட் இன் பிளாக் ப்யூட்டி பிரிவில் பங்கேற்பு, ஏராளமான பேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களில் பங்கேற்பு என அனைத்திலும் வெற்றிகண்டுள்ளார். இப்படி இருக்க, இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின்படி தற்பொழுது தெரிந்துள்ளது. அதன்படி, சான் ரேச்சல், பேஷன் ஷோக்கள் நடத்துவதற்காக தனிப்பட்ட முறையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனாலேயே தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 5ஆம் தேதி, அதிக அளவில் மாத்திரைகளை எடுத்த ரேச்சலை அவரது உறவினர்கள் உடனடியாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பல நாள்களாக அவசர சிகிச்சையில் இருந்த அவருக்கு, மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சையை தொடர்ந்து அளித்தும், அவரது உயிரிழந்தார்.

இந்த நிலையில், சான் ரேச்சல் எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது தற்கொலைக்கு தனது கணவர் அல்லது மாமியார் பொறுப்பேற்கக் கூடாது என எழுதியுள்ளார். இந்த, சம்பவம் தொடர்பான சந்தேகங்களை அவரது கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. அவரது கடிதத்தில் மன அழுத்தம், வாழ்க்கையின் நெருக்கடி, கடனைத் திருப்பி தரமுடியாமை போன்ற விஷயங்களால் தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரேச்சல் தனது வாழ்க்கை, கலை, பேஷன், சமூக பார்வைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சமூக ஊடக பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய இளமையும், நேர்மையான பார்வையும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்தது.
இதையும் படிங்க: உலகை விட்டு பிரிந்த நடிகை பி.சரோஜா தேவி..! இரங்கலை பதிவு செய்து வரும் பிரபலங்கள்..!
‘கருப்பு நிறம் ஒரு குறை இல்லை, அது ஒரு அழகு’ என அவர் அடிக்கடி பேசியதை நம்மால் பார்க்கமுடியும். இந்த சூழலில், இந்த சம்பவம், மீண்டும் ஒருமுறை மனநல சிகிச்சையின் அவசியத்தையும், பேஷன் துறையின் உள் அழுத்தங்களையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தால், அதற்கு தற்கொலை என்பது தீர்வில்ல. எனவே தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், தயங்காமல் கீழே உள்ள எண்ணை தொடர்புகொள்ளுங்கள்: "91529 87821" என தன்னலமற்ற 24 மணிநேர தொலைபேசி உதவி சேவை முறையை அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேச்சல் எடுத்த கடன்கள், அதன் விவரங்கள், அவர் சந்தித்த அழுத்தங்கள் என பல அம்சங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற மரணங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சமூக ஆதரவு, மனநல சேவைகள், மற்றும் பேஷன் துறையினருக்கு வழிகாட்டல் போன்றவை அவசியமாகின்றன.

ஒருவரின் வாழ்நாளை முடிவுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு காரணம் போதுமானதாக இருப்பதில்லை. உதவியை நாடுங்கள், ஒருவரோடு ஒருவர் பேசுங்கள். உயிர் சாதாரணமானதல்ல என சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனது பாசத்தால் பூனையை மயக்கிய நடிகர் அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!