வடிவழகி எனப்படும் மாடலிங் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. மாடலிங்கில் கிடைத்த வரவேற்பை வைத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து. அதன்பின் பெரிய இயக்குனர்களின் கண்களில் தென்பட. சினிமா துறையில் கிளாமர் நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ராய்.

இப்படி இருக்க, இயக்குநர் ஆர்.பி உதயகுமார் இயக்கத்தில் வெளியான "கற்க கசடற" என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. இப்படத்தை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான "குண்டக்க மண்டக்க, விஜயகாந்துடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படிங்க: அஜித்தை தோற்கடித்த "குட்டி தல"...! ரேஸில் அஜித்தை திணறவிட்ட ஆத்விக்...!

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக, பாரம்பரிய உடைகளை அணிந்து நடித்துவந்த ராய், பின்னர் ரசிகர்கள் கூட்டம் பெறுக, கவர்ச்சியில் தன்னை மிஞ்ச ஆளே இல்லாத அளவிற்கு ஆட்டம் போட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் அவரை தேடி வர, "நான் அவன் இல்லை 2, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ரண்மனை, சவுகார்பேட்டை, மொட்டை சிவா கெட்ட சிவா, மேதை, பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம்" உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் ஸ்டாராக மாறினார்.

இப்படி, தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்து சினிமாவில் கலக்கிய ராய், பாலிவுட் சினிமாவிலும் தனது காலடி தடத்தை பதித்து அங்குள்ள ஹீரோயின்களை திணறடித்து வருகிறார். அவரது பல படங்களில் இன்றும் அவரை நினைவு கொள்ளும் படமாக இருப்பது நடிகர் அஜித்தின் "மங்காத்தா" திரைப்படம் தான். இப்படத்தில் அவரது நடிப்பும் நடனமும் யாராலும் மறக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் பாம்பு மனிதனாக மாறும் "நாகினி" நாடகங்களை பார்த்திருப்போம், ஆனால்,ஒரு படத்தில் பாம்பிலேயே கவர்ச்சிகரமான மனித நாகமாக தோன்றிய ராய், நடிகர் ஜெய்யுடன் தண்ணீரில் இறங்கி ரொமான்ஸ் செய்து நடித்து இருப்பார். மேலும், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் "கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே" என்ற பாடலுக்கு கருப்பு நிற சேலையில் ஆளை மயக்கும் அளவிற்கு அழகாக ஆடி, பல இளசுகளின் நெஞ்சை பஞ்சாக்கி கொளுத்தி போட்டு சென்றார்.

இப்படி, என்றும் தனது அழகை குறைத்து கொள்ளாமல் இருக்கும் ராய், தனது இன்ஸ்டாகிராமில் முன்பை காட்டிலும் அதிக கவர்ச்சிகளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, நீச்சல் உடையில் இருக்கும் ராய், அவரது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மனமுருக செய்திருக்கிறார்.

தற்பொழுது நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பல ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வீர தீர சூரனுக்காக விக்ரமின் நெகிழ்ச்சிப் பதிவு.. வாழ்றது ரொம்ப கஷ்டம் என புலம்பல்..!