முதல் முறையாக மற்றொருவரின் பாடலின் மெட்டுக்களை வைத்து ரகுமான் இசையமைத்து உள்ளார் என மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். அதற்கு காரணம் ஒருவர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் அதன் தீர்ப்பும் தான். கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் "பொன்னியின் செல்வன் 2". இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்தார். இந்த படம் எப்படி மக்கள் மத்தியில் ஹிட் கொடுத்ததோ அதே போல் இந்த படத்தில் வந்த பாடல்களும் மக்கள் மத்தியில் ஹிட் கொடுத்தது.

இந்த சூழலில், இப்படத்தில் இடம் பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல் மக்கள் அனைவருக்கும் பிடித்த என்பதால் தற்பொழுது இந்த பாடலின் பெயர் கோர்ட் வரை ஒலித்துள்ளது. இந்த பாட்டின் மீதான காப்புரிமை வழக்கை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ம் ஆண்டு தொடுத்தார். இதற்காக காரணமாக ஃபையாஸ் வசிஃபுதின் டகர் தெரிவிக்கையில், 'வீரா ராஜ வீரா' பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த 'சிவ துதி' பாடலில் இருந்து இசையமைப்பட்டுள்ளதாக தனது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: என் நண்பன்னு நினைத்தேன் ஆனால் என் வீட்டை இடிச்சிட்டான்..! ஆர்யாவை விளாசிய சந்தானம்..!

இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு ரூ.2 கோடியை ரகுமான் அபராதமாக கொடுக்க வேண்டும் எனவும் படத்தில் அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இப்படி இருக்க, விசாரணையின்போது 'சிவா ஸ்துதி' பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் தான் ‘வீர ராஜா வீரா’ பாடல் இயற்றப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக உத்தரவின்போது நீதிமன்றம் பதிவு செய்தது.

இந்த நிலையில், ரூ.2 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான அமர்வு, ரூ. 2 கோடி செலுத்த கோரிய ஒரு நீதிபதி அமர்வு விதித்த தீர்ப்பை மாற்றி இடைக்கால தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை மே 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், விரிவான விசாரணை பின் வரும் நாட்களில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தோனியின் காதலி கர்ப்பமாக உள்ளாரா..! புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியில் நடிகை..!